ரஃபா
ரஃபா (அரபு மொழி: رفح, romanized: Rafaḥ) என்பது காசாக்கரையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தீனிய நகரமாகும். ரஃபா ஆளுநரகத்தின் மாவட்டத் தலைநகரமாக இருக்கும் இந்நகரம் காசா நகருக்கு தென்மேற்கில் 30 கிலோமீட்டர்கள் (19 mi) தொலைவில் அமைந்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்நகரத்தின் மக்கட்தொகை 152,950 ஆகும். இவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் பாலத்தீனிய அகதிகள் ஆவர்.
ரஃபா | |
---|---|
நகரம் | |
அரபு transcription(s) | |
• அரபு மொழி | رَفَح |
காசாக்கரையில் ரபாவின் அமைவிடம் | |
பலத்தீனிற்குள் ரஃபாவின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 31°17′19″N 34°15′07″E / 31.28861°N 34.25194°E | |
பலத்தீன் கட்டம் | 77/78 |
மாநிலம் | பாலத்தீனம் |
ஆளுநரகம் | ரஃபா |
அரசு | |
• வகை | நகரம் |
• நகராட்சித் தலைவர் | அன்வர் அல்-சயிர் (2019)[1] |
மக்கள்தொகை (2014)[2] | |
• மொத்தம் | 1,52,950 |
1982 ஆம் ஆண்டு சினாயிலிருந்து இசுரேல் வெளியேறியபோது, ரபா இரண்டாகப் பிரிக்கப்பட்டது. ஒரு பகுதி காசாக்கரையிலும், மற்றொரு பகுதி எகிப்து நாட்டிலும் அமைந்தன. குடும்பங்கள் பிரிக்கப்பட்ட இந்த நிகழ்வின்போது, முள்வேலிகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டன.[3][4][4] பொதுவான மண்டலப் பகுதியை உருவாக்கும் எண்ணத்தில் இசுரேலும் எகிப்தும் செயல்பட்டதால், நகரின் முக்கியப் பகுதிகள் சிதிலமடைந்தன.[5][6][7][8][9]
எகிப்திற்கும் பாலத்தீனிய நாட்டிற்கும் இடையேயுள்ள ஒரேயொரு கடக்குமிடமான ரஃபா எல்லையைக் கடக்கும் பகுதி இந்த நகரில் அமைந்துள்ளது. காசாக்கரையில் செயல்பாட்டில் இருந்த ஒரேயொரு வானூர்தி நிலையமான யாசர் அராபத் வானூர்தி நிலையமானது இந்நகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. 1998 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை செயல்பாட்டிலிருந்த இந்த வானூர்தி நிலையம் இசுரேலிய இராணுவத்தால் குண்டுகள் வீசப்பட்டும், இடிப்புந்துகளால் சேதப்படுத்தப்படும் செயலிழந்தது. ஹமாஸ் போராளிக் குழுவால் இசுரேலிய போர்வீரர்கள் கொல்லப்பட்டதையடுத்து, இசுரேலிய இராணுவம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Palestinians criticize Hamas' decision to appoint municipal presidents - Al-Monitor: The Pulse of the Middle East". November 2019.
- ↑ "Palestinian Central Bureau of Statistics". பார்க்கப்பட்ட நாள் 15 February 2018.
- ↑ Cinderella in Rafah. Al-Ahram, Issue No. 761, 22– 28September 2005
- ↑ 4.0 4.1 The Evolution of the Egypt-Israel Boundary: From Colonial Foundations to Peaceful Borders, pp. 3, 9, 18. Nurit Kliot, Boundary and Territory Briefing, Volume 1 Number 8. At Google books
- ↑ Razing Rafah — Mass Home Demolitions in the Gaza Strip, pp. 27–28 and 52–66 (PDF text version) on [1], Summary:. The report on refworld:. Human Rights Watch (HRW), October 2004
- ↑ Supplementary Appeal for Rafah. UNWRA, May 2004
- ↑ PCHR, Uprooting Palestinian Trees And Leveling Agricultural Land – The tenth Report on Israeli Land Sweeping and Demolition of Palestinian Buildings and Facilities in the Gaza Strip 1 April 2003 – 30 April 2004 On [2]
- ↑ Egyptian military doubling buffer zone with Gaza , demolishing nearly 1,220 more homes. Associated Press, 8 January 2015
- ↑ Look for Another Homeland. Human Rights Watch, September 2015