ரஃபா எல்லையைக் கடக்கும் பகுதி

ரஃபா எல்லையைக் கடக்குமிடம் (அரபு மொழி: معبر رفح‎, romanized: Ma`bar Rafaḥ) அல்லது ரஃபா கடக்குமிடம் என்பது எகிப்திற்கும் காசாக்கரைக்கும் இடையேயுள்ள எல்லையைக் கடக்கும் இடம் ஆகும். காசா-எகிப்து எல்லையில் அமைந்துள்ள இந்த இடம் 1979 ஆம் ஆண்டில் எகிப்திற்கும் இசுரேலுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தால் அங்கீகரிக்கப்பட்டதாகும்.

ரஃபா எல்லையைக் கடக்கும் பகுதி
معبر رفح
தாண்டுவது காசாக்கரை-எகிப்து எல்லை
இடம் பலத்தீன் நாடு ரஃபா
பராமரிப்பு இசுரேல் இசுரேல் வானூர்தி நிலைய ஆணையம் (2005 வரை)
ஐரோப்பிய ஒன்றியம் ரஃபாவிற்கான ஐரோப்பிய ஒன்றிய எல்லை உதவி அறப்பணி இயக்கம் (European Union Border Assistance Mission to Rafah-EUBAM) (2005—2007)
எகிப்து எகிப்தியர் எல்லைப் பாதுகாப்புக் கழகம்

வாயில்கள்

தொகு

ரஃபா நிலத் துறைமுகம் இசுரேல் வானூர்தி நிலைய ஆணையத்தால் 2005 ஆம் ஆண்டு வரை நிர்வகிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு, எல்லைக் கடப்பவரை ரஃபாவிற்கான ஐரோப்பிய ஒன்றிய எல்லை உதவி அறப்பணி இயக்கம் கண்காணித்து வந்தது. "சலா அல் தின் நுழைவாசல்" என்றழைக்கப்படும் ரஃபா நிலத் துறைமுகம்[1] சலா அல்-தின் சாலையில் அமைந்துள்ளது. எரேசு எல்லையைக் கடக்கும் பகுதியிலிருந்து ரஃபா செல்லும் நெடுஞ்சாலையில் இச்சாலை அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில், காசாவிலுள்ள நிலத்தடிச் சுரங்கங்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது, ரஃபா நிலத் துறைமுகத்தின் மீது இசுரேல் குண்டுத்தாக்குதல் நடத்தியது.[2]

அரபு மொழியில் அல் அவ்தா (திரும்பி வருதல்) என்றழைக்கப்படும் புதிய ரஃபா கடக்குமிடம், ரபாவின் தெற்குப் பகுதியில் அமைக்கப்பட்டது.[3]

2023 இசுரேல்-ஹமாஸ் போர்

தொகு

2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், இசுரேல் நாட்டிற்கும் ஹமாஸ் போராளிக் குழுவுக்கு போர் ஆரம்பித்தபோது, இந்த கடக்குமிடம் முற்றிலுமாக மூடப்பட்டது. காசா மக்களோ வெளிநாட்டினரோ வெளியேற அனுமதிக்க இயலாதென எகிப்திய அரசாங்கம் அறிவித்தது.[4][5][6][7][8][5] இந்த கடக்கும் இடத்தின் காசாப் பகுதியில் இசுரேல் இராணுவத்தின் வான்வழித் தாக்குதல்கள் நடந்தன.[5] காசாவிலுள்ள அமெரிக்கக் குடிமக்கள் ரஃபா எல்லையைக் கடக்கும் பகுதிக்கு அருகே வந்துசேருமாறு ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் அறிவுறுத்தியது. கடக்கும் இடம் திறக்கப்படும்போது வெளியேற வசதியாக இருக்குமென தெரிவிக்கப்பட்டது.[6][5][7]

மேற்கோள்கள்

தொகு
  1. The Rafah Crossing: A Gateway to Hope? பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம். Asharq Al-Awsat, Asharq Al Awsat, 9 February 2008
  2. Weekly Report: On Israeli Human Rights Violations in the Occupied Palestinian Territory, No. 39/2009. Palestinian Centre for Human Rights, 8 October 2009
    "At approximately 01:35, Israeli fighter jets dropped 3 bombs on Salah al-Din Gate on the Egyptian border, south of Rafah, allegedly to destroy tunnels."
  3. RAFAH Access and Closure | December 2014 பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம். OCHA, 3 July 2015. Here available பரணிடப்பட்டது 2015-11-23 at the வந்தவழி இயந்திரம்
  4. Summer Said, Egypt Denies Passage of Foreigners Through Rafah Without Aid Agreement, Wall Street Journal (October 15, 2023).
  5. 5.0 5.1 5.2 5.3 Nadeen Ebrahim, The last remaining exit for Gazans is through Egypt. Here's why Cairo is reluctant to open it, CNN (October 15, 2023).
  6. 6.0 6.1 Anna Betts, American Citizens Fleeing Gaza Say Border Crossing Still Closed, New York Times (October 14, 2023).
  7. 7.0 7.1 Humeyra Pamuk, US advises its citizens in Gaza to move closer to Egypt's Rafah crossing, Reuters (October 14, 2023).
  8. Canadians still trapped in Gaza as Rafah-crossing exit agreement falls through, Globe & Mail (October 15, 2023).

வெளியிணைப்புகள்

தொகு