ரகுவீர் சவுத்ரி

சாகித்திய அகாதமி விருது பெற்ற குசராத்தி எழுத்தாளர்

ரகுவீர் சவுத்திரி (Raghuveer Chaudhuri 1938) என்பவர் குஜராத்தி மொழியின் இலக்கியவாதி, எழுத்தாளர் ஆவார். புதினங்கள் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் என எண்பதுக்கும் மேல் நூல்களை எழுதியுள்ளார். குஜராத்தி, இந்தி ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமை கொண்டவர். இந்திய நாட்டின் உயர்ந்த விருதான ஞானபீட விருது மற்றும் சாகித்திய அகாதமி விருது பெற்றவர்.[1]

ரகுவீர் சவுத்ரி

பணிகள்

தொகு

குசராத்து மாநிலம் காந்தி நகரில் பிறந்த ரகுவீர் சவுத்திரி குசராத்து பல்கலைக் கழகத்தில் இதழியலுக்கு என்று ஒரு தனித்துறை உருவாகக் காரணமாக இருந்தார். சந்தேசு, சன்மபூமி, திவ்யபாரதி போன்ற நாளிதழ்கள், கிழமையிதழ்கள் ஆகியவற்றில் கட்டுரைகள் எழுதியுள்ளார். அம்ரிதா, வேணுவத்சலா, உபரவாசு என்பவை இவர் எழுதியவற்றில் சிறந்த புதினங்கள் ஆகும். உபரவாசு புதினத்துக்காக இவருக்கு சாகித்திய அகாதமி விருது 1977 இல் வழங்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டுக்கான பாரதிய ஞான பிட விருது இவருக்கு வழங்கப்பட்டது

பிற விருதுகள்

தொகு
  • குமார் சந்திரக் விருது
  • உமா சிநேகராசுமி விருது
  • ரஞ்சிதராம் தங்கப் பதக்கம்
  • சவுக்கத் சம்மன்

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரகுவீர்_சவுத்ரி&oldid=2720822" இலிருந்து மீள்விக்கப்பட்டது