ரஜினிகாந்தா செகாவத்

ரஜினிகாந்தா செகாவத் (Rajnigandha Shekhawat) இவர் ராஜஸ்தானைச் சேர்ந்த பிரபல பாடகியும் மற்றும் இந்தியாவின் ராஜஸ்தான் மல்சிசார் பகுதியின் இளவரசியுமாவார். இவர் ராஜஸ்தானி நாட்டுப்புறப் பாடல், பாலிவுட், ஆங்கிலம், ராஜஸ்தானி மார்வாரியின் வேறுபட்ட கூறுகளின் கலவை, தரமான பாரம்பரிய இசை போன்ற பலவற்றைப் பாடுவதில் பெயர் பெற்றவர். [1] இவர் ஐந்து படங்களின் பாடல்களுக்கு பின்னணிக் குரல் அளித்துள்ளார். இதுவரையில் இவரது மிகப்பெரிய பாடல் தர்மா திரைப்பட நிறுவனத்தின் பத்ரி கி துல்கானியா [2] என்பது 650 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கொண்டுள்ளது. இவர் 2017 ஆம் ஆண்டில் சுப் மங்கல் சவ்தான் என்ற படத்திற்காக மிகவும் நம்பிக்கைக்குரிய புதிய பாடகருக்கான மிர்ச்சி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ரைசிங் ஸ்டார் [3] என்ற மெய்நிகர் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க இவர் சமீபத்தில் அழைக்கப்பட்டார். மேலும் "பிக் பிரதர்" என்ற நிகழ்ச்சியின் இந்திய பதிப்பான "பிக் பாஸ்" இறுதிப்போட்டியிலும் பங்களித்துள்ளார்.

ராஜஸ்தானி நாட்டுப்புறம் மற்றும் ஆங்கிலத்தில் வேறுபட்ட கூறுகளின் கலவையாக [4] பாடும் ஒரே பாடகர் ரஜினிகாந்தா செகாவத் ஆவார். இவரது இரு காணொளிக் காட்சிகள் முகநூலின் வெற்றிகளாக மாறியுள்ளன. இது இணைவு ராஜஸ்தானி இசையின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட முகமாக மாறியுள்ளது. ராஜஸ்தானி பத்திரிகைகள் இப்போது இவரை "வேறுபட்ட கலவைகளின் மகாராணி" என்று குறிப்பிடுகின்றன. கூமருடனான சீப் த்ரில்ஸ் [5] என்ற நிகழ்ச்சி இவருக்கு புகழைத் தேடித் தந்தது. அதன்பிறகு ராஜஸ்தானி நாட்டுப்புற பாடல்களுடன் ஷேப் ஆப் யூ மற்றும் சிங்கிள் லேடி போன்ற இவர் பாடிய கலவையான பாடல்கள் மிகவும் பிரபலமாக உள்ளன.

குடும்பம்தொகு

ஜெய்ப்பூர் மாநிலத்தில் உள்ள மல்சிசரின் [6] முந்தைய பிரபுத்துவ குடும்பத்தைச் சேர்ந்த ரஜினிகந்தா, [7] தனது வர்க்கம் மற்றும் சாதியின் தடைகளை உடைத்து, அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிரான தனது ஆர்வத்தை பின்பற்றுவதற்காக ராஜஸ்தானின் மிகவும் பாரம்பரிய மற்றும் பழமைவாத ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த முதல் பாடகியாக ஆனார். இன்று இவர் மாநிலத்தின் மிகவும் புகழ்பெற்ற பாடகர்களில் ஒருவராக இருக்கிறார்.

பணிகள்தொகு

இவர் மூன்று இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சன் சிட்டி, தென்னாப்பிரிக்கா மற்றும் குளோபல் வில்லேஜ், துபாய், மஸ்கட் போன்ற பல இடங்களை உள்ளடக்கிய உலகளவில் 500 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். பான்டா ஃபார் அமித் திரிவேதி, ஜபோங் தீபாவளி, லெனோவா, ராஜஸ்தான் சுற்றுலா சின்னம் போன்ற பல்வேறு பிரபலமான விளம்பரங்களில் இவர் பாடியுள்ளார். மேலும் இவரது மிக சமீபத்திய வெளியீடுகள் இந்தியன் ஐடல் 10 இன் புதிய பாடலான "மௌசம் மியூசிக் கா" என்பது ரெட் பண்பலையின் புதிய விளம்பர ஒலியாகும்.

தொழில்தொகு

செகாவத் ஒரு பாலிவுட் தொழில்முறை வணிகராவார். டிஸ்னி இந்தியா, [8] டைம்ஸ் ஆஃப் இந்தியா (டைம்ஸ் மியூசிக்) ஆகியவற்றில் பணிபுரிந்தவர் . மேலும், நடிகர் ஷாஹித் கபூருடன் நிர்வாகத் திறனில் தொடர்பு கொண்டிருந்தார்.[9] மும்பையின் பாட்கண்டே பல்கலைக்கழகத்தில் விசாரத் மற்றும் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் முதுகலைப் பட்டம் பெற்ற பெற்ற பாடகியாவார். தற்போது கச்சேரிகள், பாலிவுட் பின்னணி பதிவுகள் மற்றும் இவரது தனிப்பட்ட காணொளி படப்பிடிப்புகளுக்கான சுற்றுப்பயணத்திற்கு இடையில் தனது நேரத்தை பிரித்துக் கொள்கிறார். [10]

விருதுகள்தொகு

  • 2017 இல், சுப் மங்கல் சவ்தான் படத்தில் "கங்கத்" என்ற பாடலுக்காக மிர்ச்சி ஆண்டு விருதுகளின் வளரும் பாடகி என்ற விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார்
  • சிறந்த பெண் கலைஞர் விருது 2011இல் வழங்கப்பட்டது. [11]
  • ராஜஸ்தான் சங்கீத் ரத்னா [12] [13]
  • டி.என்.ஏ வுமன் ஆஃப் சப்ஸ்டன்ஸ், ராஜஸ்தான் [14] [15]
  • 2017 இல் திரைப்படம் அல்லாத இசை பிரிவில் ஜெய்ப்பூர் இசை விழா விருதுகள் சிறந்த ஃப்யூஷன் பாடல் விருது [16]

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஜினிகாந்தா_செகாவத்&oldid=2912866" இருந்து மீள்விக்கப்பட்டது