ரஜினி தேவி
ரஜினிகாந்த தேவி (Rajni Devi) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் 1937 சனவரி 31 அன்று சாரங்கரின் கிரிவிலாசு அரண்மனையில் பிறந்தார். தேவி, நாக்பூர் புனித ஜோசப் கன்னிமடத்திலும் நாக்பூர் பல்கலைக்கழகத்தின் லேடி அமிர்த பாய் கல்லூரியிலும் கல்வி பயின்றார். 1967ஆம் ஆண்டில், அவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக ராய்கர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு 4ஆவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971ஆம் ஆண்டில் இடைக்காலத் தேர்தலுக்காகச் சபை கலைக்கப்படும் வரை இவர் உறுப்பினராக இருந்தார்.
குடும்பம்
தொகுதேவி, இந்திய நாடாளுமன்ற மக்களவை மேனாள் உறுப்பினர் ராஜா நரேஷ்சந்திர சிங்கின் மகள் ஆவார். இவர் கர்னல் வீரேந்திர சிங்கை மணந்து, மத்தியப் பிரதேசத்திலுள்ள ஜபல்பூரில் வசித்து வந்தார். இவர்களுக்கு நந்திதா சிங் என்ற மகளும் சந்திரவீர் சிங் என்ற மகனும் உள்ளனர்.[1]
இறப்பு
தொகுதேவி 31 ஆகத்து 2019 அன்று காலமானார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The University of Queensland Homepage". www.uq.edu.au (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-12-20.