ரஞ்சித மஞ்சரி (இதழ்)

ரஞ்சித மஞ்சரி: இது இந்தியாவில் சென்னையிலிருந்து 1932ம் ஆண்டு முதல் மாதாந்தம் வெளிவந்த இதழாகும்.

ஆசிரியர் தொகு

பா. தாவுத் சா.

வெளியீடு தொகு

"தாருல் இஸ்லாம்" வெளியீடு. இக்காலகட்டங்களில் வெளிவந்த தாருல் இஸ்லாம் இதழ் மாதந்தோறும் கலை இலக்கிய நோக்கம் கொண்டு இவ்விதழை வெளியிட்டது.

பணிக்கூற்று தொகு

"ஓர் உயர்ந்த மாத சஞ்சிகை"

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் பெரும்பாலும் படைப்பிலக்கியங்களும், வரலாற்று இலக்கியக் கதைகளும் இடம்பெற்றிருந்தன. முதல் இதழில் "அல்பு லைலா வலைலா" என்ற பெயரில் பிரபல்யம் பெற்றிருந்த "அரபுக்கதைகளை ஆயிரத்தோர் இரவில்" எனும் பெயரில் தாவூத் சா தமிழில் எழுதத் தொடங்கியிருக்கிறார். "ஆயிரம் இரவும் அப்பால் ஓரிரவும்" எனும் கதை அரபி மொழியில் "அல்பு லைலா வலைலா" என பெயரிடப்பட்டுள்ளது. இப்பெயரின் பொருள், ஆயிரத்தோர் இரவு என்றே சொல்லப்படும். இன்னமும் ஆழ்ந்து நோக்குமிடத்து "ஆயிரம் இரவும் அப்பால் ஓரிரவும்" என்பதுதான் அந்த அரபிப் பெயரின் நேரான பொருளாகும்" என்ற முகவுரையுடன் கதை தொடங்குகிறது. மேலும், இது போன்ற வரலாற்று முக்கியத்துவமிக்க கதைகளும் தொடங்கப்பட்டன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சித_மஞ்சரி_(இதழ்)&oldid=727417" இலிருந்து மீள்விக்கப்பட்டது