ரத்னஜீவன் ஹூல்

பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் இலங்கையில் நன்கு அறியப்பட்ட மின் பொறியியல் பேராசிரியராவார். இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பணியாற்றினார். இந்நியமனத்துக்கு முன்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியற் பீடத்தில் முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கு விடுக்கப்பட்டுள்ள கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக விடுமுறையில் வெளிநாட்டில் வசிக்கிறார்[1]. விடுதலை புலிகளோ அல்லது அவர்களுக்க்கு சார்பான ஆயுதக் குழுக்களோ இக்கொலை மிரட்டலை விடுத்திருப்பதாக மனித உரிமைகளுக்கான சர்வதேச அமைப்பான அமெனிஸ்டி தெரிவித்துள்ளது[2]. ரத்னஜீவன் மனித உரிமை செயற்பாட்டாளர் ராஜன் ஹூலின் சகோதரர் ஆவார்.

ரத்னஜீவன் ஹூல்
பிறப்பு15 செப்டெம்பர் 1952 (அகவை 71)
பணிகல்வியாளர்
வேலை வழங்குபவர்
  • Drexel University
  • Rensselaer Polytechnic Institute

ஆதாரங்கள் தொகு

  1. "அமெனிஸ்டி அறிக்கை 1". Archived from the original on 2006-04-19. பார்க்கப்பட்ட நாள் 2006-04-19.
  2. "அமெனிஸ்டி அறிக்கை 2". Archived from the original on 2006-10-05. பார்க்கப்பட்ட நாள் 2006-11-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரத்னஜீவன்_ஹூல்&oldid=3575809" இலிருந்து மீள்விக்கப்பட்டது