ராஜன் ஹூல்
ராஜன் ஹூல் (Rajan Hoole) இலங்கையின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் முன்னாள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கணித விரிவுரையாளருமாவார். இவர் 1988 ஆம் ஆண்டு ராஜினி திராணகமவுடன் இணைந்து மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தை தொடங்கினார். தற்போது இவர் தென்னிலங்கையிலிருந்து மனித உரிமை நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து வருகின்றார்.[1]
ராஜன் ஹூல் | |
---|---|
வேலை வழங்குபவர் | |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுராஜன் கூல் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ்க் கிறிஸ்தவ பாதிரியாருடைய மகனாவார். பேராசிரியர் ரத்னஜீவன் ஹூல் இவரது சகோதரர் ஆவார். ராஜன் கூல் தன்னுடைய மாணவப் பருவத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளராகவும் தந்தை செல்வநாயகத்தில் நம்பிக்கை உடையவராகவும் இருந்தார். 1977 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக நடந்த வன்முறை நிகழ்வுகளை அடுத்து அரசியல் அமைப்புகளில் ஈடுபடத் தொடங்கினார். பின்னர் லண்டனுக்கு உயர்கல்வி கற்கச் சென்ற கூல் 1985ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் திரும்பினார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கணிதவியல் விரிவுரையாளராக இணைந்த கூல் சண்டே ரிவிவ் (Saturday Review) என்ற ஆங்கில பத்திரிகையில் பகுதி-நேர ஆசிரியராகவும் பணியாற்றினார்.[1]
1986 ஆம் ஆண்டு ராஜினி திராணகமவும் சிறிதரனும் தங்களின் உயர் கல்வியை முடித்துக் கொண்டு லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் திரும்பினார்கள். இதையடுத்து இவர்களோடு ஒன்று சேர்ந்த கூல், 1989 ஆம் ஆண்டு முறிந்த பனை என்னும் ஆங்கில நூலை எழுதி வெளியிட்டார். அதே ஆண்டில் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தையும் ஆரம்பித்தார். 1989 செப்டம்பர் 21 இல் ராஜினி பணிக்கு செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1990 ஆம் ஆண்டு இரண்டாவது ஈழப்போர் தொடங்கியதும் மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏனைய உறுப்பினர்கள் உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்ப்பாணத்தை விட்டு தென்னிலங்கைக்கு தப்பிச் சென்றார்கள். கூலின் பல்கலைக்கழக வேலையும் பறிபோனதால் அவரும் தென் இலங்கைக்கு குடிப்பெயர்ந்தார்.[1][2]
விருதுகள்
தொகுபன்னாட்டு மன்னிப்பு அவை, மனித உரிமைகள் கண்காணிப்பு உட்பட 11 முக்கிய பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து வழங்கும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கான 2007 ஆம் ஆண்டு மார்ட்டின் என்னல்ஸ் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன இவர் புருண்டியைச் சேர்ந்த மற்றுமொரு மனித உரிமைச் செயற்பாட்டாளர்ரான கிளேவர் ம்போனிம்ப்பா, கோபாலசிங்கம் சிறிதரன் என்பர்களுடன் இணைந்து பெற்றுக் கொண்டார்.[3][4]
வெளியீடுகள்
தொகு1. முறிந்த பனை - The Broken Palmyrah (1989, Co author, Harvey Mudd College California)
2. Sri Lanka: The Arrogance of power; Myth, Decadence and murder (2000, UTHR, Colombo)
ஆதாரங்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "தமிழ் அறிமுகம்". Archived from the original on 2011-09-29. பார்க்கப்பட்ட நாள் 2006-11-19.
- ↑ PBS ராஜன் பற்றிய கருத்துக்கள்
- ↑ 2007 ஆம் ஆண்டு மார்ட்டின் என்னல்ஸ் விருது பற்றிய பிபிசி தமிழ் செய்திகள்
- ↑ 2007 ஆம் ஆண்டு மார்ட்டின் என்னல்ஸ் விருது பற்றிய பிபிசி ஆங்கில செய்திகள்