ரத்னா (ஐ ஈ டி - 1411) (நெல்)
ரத்னா (ஐ ஈ டி - 1411) (Ratna (IET-1411) என்பது; 1974 - 1978 ஆம் ஆண்டுவாக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட, மத்தியகால நெல் வகையாகும்.[1] 130 - 135 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய இந்த நெல் இரகம், டி கே எம் - 6 (TKM-6) என்ற நெல் இரகத்தையும், ஐ ஆர் - 8 (IR-8) எனும் நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட நெல் வகையாகும். புன்செய் எனப்படும் மானாவாரி மற்றும் மேட்டுநிலப் பகுதிகளில் நன்கு வளரக்கூடிய, இது ஒரு எக்டேருக்கு சுமார் 4500 - 5000 கிலோ (45-50 Q/ha) மகசூல் தரவல்லது. நேரடி விதைப்புக்கு ஏற்ற இரகமான இது, 85 - 90 சென்டிமீட்டர் (85-90 cm) உயரம் வளரும் குள்ளப் பயிராகும். மேலும், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேச, தாராய் பிராந்தியம், மற்றும் பிகார், அசாம், ஒரிசா, மேற்கு வங்காளம், மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெருமளவில் பயிரிடப்படுகின்றது.[2][3]
ரத்னா (ஐஈடி-1411) Ratna (IET-1411) |
---|
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
டிகேஎம்-6 x ஐஆர்-8 |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
130 - 135 நாட்கள் |
மகசூல் |
4500 - 5000 கிலோ |
வெளியீடு |
1978 |
நாடு |
இந்தியா |
சான்றுகள்
தொகு- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Details of Rice Varieties : Page 1 - 18 - Ratna (IET-1411)". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-03-29.
- ↑ Variety Name -::- Ratna CR-44-11(IET 1411)