ரமணன்

இலங்கைத் தமிழ்ப் போராளி

கேணல் ரமணன் என்ற இயக்கப் பெயரால் அறியப்படும் கந்தையா உலகநாதன் [1][2] (Kandiah Ulaganathan) என்பவர் விடுதலைப் புலிகளின், மூத்த தளபதியாகவும், விடுதலைப் புலிகளின் இராணுவப் பிரிவில் இரண்டாம் கட்டத் தளபதியாகவும், கிழக்குப் பிராந்தியத்தில் முதன்மை புலனாய்வு செயற்பாட்டாளராகவும் இருந்தவர்.[3][4] இவர் இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம், பலுக்காமத்தைச் சேர்ந்தவராவார்.

கேணல் ரமணன்
பிறப்பு1966
இறப்பு21, மே, 2006
இலங்கை, வவுணதீவு
தேசியம்இலங்கையர்
மற்ற பெயர்கள்கந்தையா உலகநாதன்
பணிவிடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்திய முதன்மை புலனாய்வு செயற்பாட்டாளர்
அரசியல் கட்சிதமிழீழ விடுதலைப் புலிகள்

துவக்ககால வாழ்க்கை

தொகு

உல்கநாதன் 1966 ஆம் ஆண்டு பலுகாமத்தில் ஒரு வேளாண் குடும்பத்தில் பிறந்தார். கண்டுமணி மகா வித்தியாலயத்தில் படித்தார். 1986ஆம் ஆண்டு இவரது சகோதரர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னர் இவர் இயக்கத்தில் இணைந்தார். இவரது சகோதரர் 1987 இல் இந்திய அமைதிப்படையுடனான ஒரு மோதலில் இறந்தார்.[5]

இறப்பு

தொகு

கேணல் ரமணன் 2006 மே 21 அன்று வவுணதீவு முன்னோக்கி பாதுகாப்புப் பாதையில் குறி சுடும் வீரரால் கொல்லப்பட்டார்.[6] குறி சுடும் வீரர் இலங்கை இராணுவத்துடன் தொடர்புடைவர் என்று கூறப்பட்டது.[7] இராணுவப் படைகள் கூறும்போது[8] தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் பதுங்கியிருந்து தாக்கியதாக கூறியது. மோட்டார் சைக்கிளில் சென்ற இவரை வழிமறித்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் ஒரு கண்ணிவெடியை வெடிக்கவைக்க முயன்றனர், அது தோல்வியுற்றது, ஆனால் துப்பாக்கிச் சூட்டினால் இவரைக் கொன்றனர்.[9]


மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமணன்&oldid=3941711" இலிருந்து மீள்விக்கப்பட்டது