ரயத்துவாரி நிலவரி முறை

ரயத்துவாரி என்பது பிரித்தானிய இந்தியாவில் விவசாய நிலங்களில் இருந்து வரி வசூல் செய்யும் இரு முறைகளில் ஒன்றாக இருந்தது. மற்றொன்று ஜமீன்ந்தாரி முறை.

ரயத்துவாரி முறையின் படி பிரித்தானிய அரசு நிலத்தைப் பயிரிடுபரிடம் நேரடியாக வரி வசூல் செய்தது. “ரயத்து” என்ற சொல்லுக்கு “உழவர்” என்று பொருள். பயிரிடுபவர்களிடம் வரி வசூல் செய்து அரசுக்குச் செலுத்தும் இடைத்தரகர்கள் இம்முறையில் இருக்கவில்லை. மற்றொரு முறையான ஜமீந்தாரி முறையில் பயிரிடுபவர்களிடமிருந்து வரி வசூல் செய்த ஜமீன்தார்கள் அதில் ஒரு பகுதியை தாங்கள் வைத்துக்கொண்டு மீதியானதை அரசுக்குச் செலுத்தினர். அரசுக்கும் பயிரிடுபவருக்கும் இடையே இடைத்தரகராகச் செயல்பட்டனர். ரயாட்வாரி முறையில் பயிரிடுபவர் நிலத்தீர்வையை நேரடியாக அரசுக்குச் செலுத்தினர். தனது நிலத்தை அவர் நினைத்தவாறு விற்கவோ, அன்பளிப்பாகக் கொடுக்கவோ, அடகு வைக்கவோ முடிந்தது. விதிக்கப்படும் தீர்வையை அவர் தவறாமல் செலுத்தி வரும் வரை சட்டப்படி அவரை அரசால் அவரது நிலத்திலிருந்து வெளியேற்ற இயலாது. மேலும் தான் பயிரிடும் நிலத்தின் அளவை நினைத்தபடி கூட்டவும் குறைக்கவும் உரிமை பெற்றிருந்தார். பஞ்ச காலங்களிலும், விளைச்சல் குறைவான காலங்களிலும் விளைச்சலுக்கு ஏற்ப நிலத்தீர்வை குறைத்துக் கொள்ளப்பட்டது.[1]

1833 செயிண்ட் ஹெலினா சட்டப்படி இரயத்துவாரி நிலவரி வசூலிக்கும் முறை துவங்கியது. [2] சென்னையை அடுத்து மும்பை மாகாணத்திலும் இது அறிமுகப்படுத்தப்பட்டது.[3]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு