ரஷ்மி தேசாய்

இந்திய நடிகை

ரஷ்மி தேசாய் என்பவர் ஓர் இந்திய நடிகையும் மாடலும் ஆவார். இவர் உத்தரன் என்ற இந்தி தொடரில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். இந்தி தொலைக்காட்சிகளின் நடன நிகழ்ச்சிகளிலும் உண்மைநிலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். தற்போது இவர் தில் ஸே தில் தக் என்ற கலர்ஸ் டிவியின் தொடரில் நடித்து வருகிறார்.

ரஷ்மி தேசாய்
ஸ்டார் பரிவார் விருதுகள் 2010 நிகழ்வின் போது ரஷ்மி தேசாய்
பிறப்புதிவ்யா தேசாய்[1]
13 பெப்ரவரி 1986 (1986-02-13) (அகவை 38)[2]
தேசியம்இந்தியன்
பணிநடிகை, மாடல், நடன மங்கை
செயற்பாட்டுக்
காலம்
2004-present
அறியப்படுவதுஉதரன் தொடரில் தபஸ்யா ரகுவேந்திர பிரதாப் ராடோர்[3]
வாழ்க்கைத்
துணை
நந்திஷ் ஸந்து (2012–2016)

சின்னத்திரை வாழ்க்கை

தொகு

தொடக்கத்தில் போச்புரி பட நடிகையாக அறியப்பட்ட ரஷ்மி தேசாய் 2006ஆம் ஆண்டு ஜீ தொலைக்காட்சியின் ராவண் என்ற தொடரில் மண்டோதரியாக நடித்ததன் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு ஒருசில தொடர்களில் நடித்திருந்தாலும் இவர் பரவலாக அறியப்படவில்லை. பிறகு 2008 ஆம் ஆண்டு அவர் நடித்த உத்தரன் தொடர் அவரது சின்னத்திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் மூலம் இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது இவர் சித்தார்த் சுக்லாவிற்கு ஜோடியாக தில் ஸே தில் தக் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

ரஷ்மி தேசாய் ஜலக் திக்லா ஜா, கத்ரோன் கே கிலாடி உள்ளிட்ட பல நடன மற்றும் உண்மைநிலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும் ஸ்டார் ப்ளஸ் டிவியின் நச் பலியே-7 நடன நிகழ்ச்சியில் தன் கணவர் நந்திஷ் சந்துவுடன் கலந்து கொண்டு அதில் இரண்டாம் இடம் வென்றார்.

சொந்த வாழ்க்கை

தொகு

ரஷ்மி தேசாய் 2012 ஆண்டு தன்னுடன் உத்தரன் தொடரில் நடித்த நந்திஷ் சந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக 2016 ஆம் ஆண்டு மணமுறிவு செய்தனர்.[4]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

தொகு
தொடர் ஆண்டு விருது பகுப்பு முடிவு
உத்தரன் 2009 9வது இந்தியன் டெல்லி விருதுகள் சிறந்த எதிர்மறை நடிகை பரிந்துரை
2010 10வது இந்தியன் டெலிவிஷன் விருதுகள் சிறந்த நடிகை வெற்றி
சிறந்த எதிர்மறை நடிகை வெற்றி
3வது ஜீ கோல்ட் விருதுகள் சிறந்த எதிர்மறை நடிகை வெற்றி
பிக் ஸ்டார் என்டர்டெயின்மெண்ட் விருதுகள் சிறந்த தொலைக்காட்சி நடிகை வெற்றி
2011 4வது ஜீ கோல்ட் விருதுகள் சிறந்த நடிகை (நடுவர் தேர்வு) வெற்றி
சிறந்த நடிகை (மக்கள் தேர்வு) வெற்றி
அப்ஸரா விருதுகள் சிறந்த நடிகை வெற்றி
2011 பிக் டெலிவிஷன் விருதுகள் பிக் நம்கீன்(கலவை) கதாபாத்திர நடிகை (நாடகம்) வெற்றி
பிக் கதர்நாக்(ஆபத்தான) கதாபாத்திர நடிகை (நாடகம்) பரிந்துரை
2012 அப்ஸரா விருதுகள் சிறந்த நடிகை பரிந்துரை
தில் ஸே தில் தக் 2017 கலர்ஸ் கோல்டன் பெடல் விருதுகள் சிறந்த நடிகை பரிந்துரை
பிடித்த சின்னத்திரை ஜோடி வெற்றி

மேற்கோள்கள்

தொகு
  1. TNN (29 January 2008). "Divya is now Rashmi". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 8 July 2016.
  2. "Mrunal Jain wishes sister Rashami Desai a happy birthday!". The Times of India. 13 February 2016. பார்க்கப்பட்ட நாள் 8 July 2016.
  3. "`Uttaran` changed my life: Rashmi Desai". Zee News. 7 November 2012. பார்க்கப்பட்ட நாள் 8 July 2016. After taking a break from the show, the 26-year-old went on to shake a leg on dance reality show 'Jhalak Dikhlaa Jaa'.
  4. "TV actors Rashami Desai, Nandish Sandhu file for divorce". Hindustantimes.com. 30 December 2015. பார்க்கப்பட்ட நாள் 8 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஷ்மி_தேசாய்&oldid=3944635" இலிருந்து மீள்விக்கப்பட்டது