ராகம் (சிற்றிதழ்)

தமிழ் சிற்றிதழ்

ராகம் என்பது 1980களின் துவக்கத்தில் வெளியான ஒரு இலக்கிய தமிழ்ச் சிற்றிதழ் ஆகும். இது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளியில் இருந்து வெளியானது. இந்த இதழானது ஆர். ரமேஷ்குமார், எம். செந்தில்குமார், ஐ. பிரான்சிஸ் மனோகர், எம். டி. முத்துக்குமார் ஆகியோரை ஆசிரியர் குழுவாகக் கொண்டு வெளியானது.[1]

வரலாறு

தொகு

ஓராண்டு காலம் கையெழுத்துப் பிரதியில் ராகம் வெளிவந்த நிலையில், அச்சில் 1984 ஆகத்து முதல் வெளிவந்தது. இந்த அச்சு இதழ் தீபம் அளவில் பெரியதாய், 48 பக்கங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

இதர பத்திரிகைகளில் வருவதைவிட மாறுபட்ட கலைகளையும் வித்தியாசமான கவிதைகளையும் தருவதற்கு ராகம் முயற்சி செய்தது. தற்கால ஐரோப்பிய, ஆங்கிலேய, அமெரிக்கப் படைப்பாளிகள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளைப் பிரசுரித்தது. சில படைப்புகளை மொழி பெயர்த்துத் தந்தது. ராகம் ஆறு இதழ்கள்தான் வெளியானது. பிறகு வெளிவரவில்லை.[1]

குறிப்புகள்

தொகு
  1. 1.0 1.1 வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 255–257. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகம்_(சிற்றிதழ்)&oldid=3448577" இலிருந்து மீள்விக்கப்பட்டது