ராக் அவுஸ் இராணுவ முகாம்

இலங்கையில் உள்ள இராணுவ முகாம்

ராக் ஹவுஸ் இராணுவ முகாம் (Rock House Army Camp) என்பது இலங்கையின் மேற்கு மாகாணத்தின், கொழும்புக்கு வடக்கே முகத்துவாரத்தில் அமைந்துள்ள ஒரு இராணுவ முகாம் ஆகும்.[1] இது இலங்கை தரைப்படையின் இலங்கை கவசப் படையின் படையணியின் தலைமையகமாக செயல்படுகிறது.

ராக் அவுஸ் இராணுவ முகாம்
கொழும்பு, மேல் மாகாணம்
ராக் அவுஸ் இராணுவ முகாம் is located in Colombo Municipality
ராக் அவுஸ் இராணுவ முகாம்
ராக் அவுஸ் இராணுவ முகாம்
ஆள்கூறுகள் 6°57′51″N 79°52′06″E / 6.9642°N 79.8683°E / 6.9642; 79.8683
வகை இராணுவ முகாம்
இடத் தகவல்
கட்டுப்படுத்துவது இலங்கை தரைப்படை
இட வரலாறு
பயன்பாட்டுக்
காலம்
1940கள் – தற்போது
காவற்படைத் தகவல்
காவற்படை இலங்கை கவசப் படை

வரலாறு

தொகு

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஹென்றி அகஸ்டஸ் மார்ஷல் என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்ட ராக் ஹவுஸ் என்ற பெயரிலிருந்து இந்த படைத் தளம் அதன் பெயரைப் பெற்றது. இவர் இலங்கையின் முதல் பிரித்தானிய ஆளுநராக இருந்த பிரடெரிக் நோர்த் உடன் வந்த ஒரு ஆங்கிலேயர் ஆவார். மார்ஷல் இலங்கை குடிமைப் பணியில் அதிகாரியாக இருந்தார் மேலும் இலங்கையின் கணக்காய்வாளர் நாயகமாக பணியாற்றினார். இவர் தனது மற்ற வீடுகளான விஸ்ட் பங்களா, மோடெரா ஹவுசுடன் ராக் ஹவுசையும் கட்டினார். பின்னர் இது இலங்கையின் தலைமை நீதிபதியான சர் வில்லியம் கோக்கின் இல்லமாக மாறியது.

இந்த இடம் பின்னர் பிரித்தானிய இராணுவத்தால் கையகப்படுத்தபட்டது. இரண்டாம் உலகப் போர் வெடித்தவுடன், 1வது கடற்கரைப் படைப்பிரிவின் சிலோன் படையணி பீரங்கிப் படைகளால் இந்த இடம் நிர்வகிக்கப்பட்டது. 1948 இல் இலங்கை விடுதலைப் பெற்ற பின்னர் புதிதாக அமைக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் சிலோன் பீரங்கிப் படையின் வசம் இந்த தளம் வந்தது. 1957 இல் 1 வது உளவுப் படை அகற்றபட்டது மேலும் 1958 இல் இது ஒரு முழு படையணியாக ஆனது. 1962 ஆம் ஆண்டில், கடலோர பீரங்கிப் படைகள் அகற்றபட்டன. மேலும் சிலோன் ஆர்மர்டு கார்ப்ஸ் சிலோன் பீரங்கிகளிடமிருந்து இத் தளத்தை எடுத்துக் கொண்டது. 1960 களில் இருந்து இந்த அலகு நெருக்கடி சூழ்நிலைகளிலும் உள்நாட்டு அமைதியின்மையிலும் தலைநகரைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்பை வழங்கியது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராக்_அவுஸ்_இராணுவ_முகாம்&oldid=3978766" இலிருந்து மீள்விக்கப்பட்டது