ராசிந்தர் சிங் சூன்

ராசிந்தர் சிங் சூன் (Rajinder Singh Joon) (பிறப்பு: ஆகத்து 15,1956) இந்தியாவின் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.[1]. இவர் சாஜ்ஜர் மாவட்டத்தில் உள்ள பகதூர்கட் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். இவர் இந்திய தேசிய காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2019 அரியானா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.[2].

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

இவர் அரியானாவின் பஹதுர்கரைச் சேர்ந்தவர். இவரது தந்தை சி. சூரஜ்மல் ஜூன் பஹதுர்கரின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 1977 ஆம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்த தில்லி இந்து கல்லூரியில் பி. ஏ. பட்டம் பெற்றார்.[3]

தொழில்

தொகு

ராசிந்தர் சிங் 2019 அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் பகதூர்கட் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 55,825 வாக்குகளைப் பெற்ற இவா் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சோ்ந்த நரேஷ் கௌசிக்கை 15,491 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rajinder Singh Joon". www.rajindersinghjoon.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-11.
  2. "Bahadurgarh Constituency Election Results 2019: Bahadurgarh Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-11.
  3. "Rajinder Singh Joon(Indian National Congress(INC)):Constituency- BAHADURGARH(JHAJJAR) - Affidavit Information of Candidate:". www.myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-09-11.
  4. Live, A. B. P. "Bahadurgarh Assembly Election Results 2020 Live Updates, Bahadurgarh Assembly Election Latest News & Updates". news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-09-11.
  5. "Bahadurgarh Election Results 2019 Live Updates (बहादुरगढ़): Rajinder Singh Joon of Congress Wins". News18 (in ஆங்கிலம்). 2019-10-24. பார்க்கப்பட்ட நாள் 2024-09-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசிந்தர்_சிங்_சூன்&oldid=4106274" இலிருந்து மீள்விக்கப்பட்டது