ராசுபைட்டு
ஆக்சைடு கனிமம்
ராசுபைட்டு (Raspite) என்பது PbWO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும் ஈய தங்குசுடேட்டு கனிமம் என்று இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. [1] ஒற்றைசாய்வுடன் மஞ்சள் முதல் மஞ்சள் பழுப்பு வரையிலான நிறங்களில் இது ஒரு படிகமாகத் தோன்றுகிறது. நாற்கோண சுடோல்சைட்டு கனிமத்தின் தாழ்வெப்ப ஒற்றைச்சாய்வின் இரண்டாவது வடிவமாக இக்கனிமம் கருதப்படுகிறது. [1][2] 1897 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவிலுள்ள நியூசவுத் வேல்சு மாநிலத்தின் புரோக்கன் இயில் நகரத்தில் ராசுபைட்டு கண்டறியப்பட்டது. 1846-1907 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்த செருமானிய-ஆத்திரேலிய வளவாய்ப்புத் தேடுநரும் இக்கனிமத்தை கண்டுபிடித்தவருமான சார்லசு ராசுப் நினைவாக இதற்கு ராசுபைட்டு எனப் பெயரிடப்பட்டது. [3]
ராசுபைட்டு Raspite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | ஆக்சைடு கனிமம் |
வேதி வாய்பாடு | PbWO4 |
இனங்காணல் | |
படிக இயல்பு | நீள்வட்டம் |
படிக அமைப்பு | ஒற்றைச் சாய்வு |
பிளப்பு | {100} இல் தெளிவு |
மோவின் அளவுகோல் வலிமை | 2.5-3 |
மிளிர்வு | விடாப்பிடியானது |
கரைதிறன் | HCl அமிலத்தில் சிதைவடையும் |
இதையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Handbook of Mineralogy
- ↑ Mindat entry
- ↑ "Raspite Mineral Data", Webmineral.com, பார்க்கப்பட்ட நாள் September 12, 2010