ராஜஸ்தான் மாநில ஆவணக் காப்பகம்
ராஜஸ்தான் மாநில காப்பகம் என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர் நகரில் அமைந்துள்ள ஒரு காப்பகமாகும் . மாநில ஆவணக் காப்பகம் 1955 ஆம் ஆண்டிலேயே நிறுவப்பட்டது. பாரசீக ஃபார்மன்கள், நிஷான்கள், மன்ஷூர்கள், அக்பரத், வக்கீல் அறிக்கை, அர்ஸ்தாஷ்ட், கட்டூத் போன்ற முகலாய அரசர்கள் காலத்தின் நிர்வாகப் பதிவுகளின் வளமான சேகரிப்பு மற்றும் ராஜஸ்தானின் இளவரசர்களான பஹியாத், பட்டாஸ், பர்வானாஸ், ருக்காஸ், சித்தியட் போன்றோரின் நிர்வாகத்தின் போது உருவாக்கப்பட்ட பதிவுகள் உள்ளன. நுண்படங்கள், நூலகக்குறிப்புகள் மற்றும் நிறுவனம் வழங்கும் ஆராய்ச்சி அறைகள் போன்ற வசதிகளை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தலாம். சுற்றுலாப் பயணிகளுக்காக, நிர்வாக, சமூக, பொருளாதார மற்றும் வரலாற்று மதிப்புள்ள முக்கிய ஆவணங்களைக் காட்சிப்படுத்தும் பதிவுக் காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. காப்பகங்களின் தலைமையகம் பிகானேரில் உள்ளது மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஏழு நகரங்களில் கிளைகள் உள்ளன.[1]
முகலாயர் காலம் முதல் தற்போதைய காலகட்டத்தின் 30 ஆண்டுகள் பழமையான வரலாற்று பதிவுகள் வரை அறிவியல் பூர்வமாக பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் இங்கே சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.
மாநில ஆவணக் காப்பகத்தின் முதன்மைக் கடமைகள்
தொகு- அதன் பாதுகாப்பில் உள்ள பதிவுகளைப் பாதுகாத்தல் மற்றும் அவற்றிலிருந்து அரசுத் துறை, நீதித்துறை மற்றும் பொதுமக்களுக்குத் தேவைப்படும்போது தகவல்களை வழங்குதல்,மற்றும்
- வடிவமைக்கப்பட்ட விதிகளுக்கு இணங்க பாதுகாக்கப்பட்ட தகவல்களை வரலாற்று ஆராய்ச்சி நோக்கங்களுக்காக வரலாற்று அறிஞர்கள், மாணவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அணுகுவதற்கு
இவையே ராஜஸ்தான் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள மாநில ஆவணக் காப்பகத்தின் முதன்மைக் கடமைகள் ஆகும்.[2]
வெளி இணைப்புகள்
தொகுஇணையதளம் [1]
குறிப்புகள்
தொகு- [இந்தியாவில் உள்ள நூலகங்கள், காப்பகங்கள் மற்றும் தகவல் மையங்களின் கையேடு பி எம். குப்தா எழுதியது]
- [ராஜஸ்தான் மாநில ஆவணக் காப்பகம்: ராஜஸ்தான் மாநில ஆவணக் காப்பகத்தின் அறிமுகம்]