ராஜாசரஸ்
ராஜாசரஸ் புதைப்படிவ காலம்:Late Cretaceous | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | ராஜாசரஸ்(Rajasaurus)
|
இருசொற் பெயரீடு | |
ராஜாசரஸ் நர்மதென்ஸிஸ் (Rajasaurus narmadensis) வில்சன் et al., 2003 |
ராஜாசரஸ் என்பது ஒரு புலால் உண்ணும் டைனோசர் ஆகும். இது முதன் முதலில் சிக்காகோ தொல்லுயிர் அறிஞர்களான பால் செரீனோ, ஜெஃப் வில்சன் மற்றும் இந்திய நிலவியல் கழகம்(Geological Suvery of India) தொல்லுயிர் அறிஞர் சுரேஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோரால் 2003-ஆம் ஆண்டு விவரிக்கப்பட்டது. இந்த டைனோசர் இனத்தில் புதைபடிவமாக்கப்பட்ட எலும்புகள் சுரேஷ் ஸ்ரீவஸ்தாவால் 1982-1984இல் குஜராத்தில் உள்ள கேதா மாவட்டத்தின் ராஹியோலி என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இதே போன்ற புதைபடிவங்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இரு இடங்களின் தூரத்தை கணக்கில் கொண்டு இந்த ராஜாசரஸ் டைனோசர் குஜராத்தில் நர்மதா நதிவரை பரவியிருந்திருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.
ராஜாசாரஸ் நர்மதென்ஸிஸ் என்ற பெயருக்கு நர்மதாவின் ராஜ டைனோசர் என்று பொருள். இந்த டைனோசர் இந்திய துணைக்கண்டம் ஆசியப் பெருநிலபரப்புடன் மோதுவதற்கு முற்பட்ட காலத்தில் இருந்த இந்திய நிலப்பரப்பில் இருந்திருக்கிறது.