ராஜீவ் ஜசுரோதியா
இந்திய அரசியல்வாதி
ராஜீவ் ஜசுரோதியா (Rajiv Jasrotia-பிறப்பு அக்டோபர் 26,1973) ஓர் இந்திய அரசியல்வாதியும் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் ஆவார். ஜசுரோதியா 2024 முதல் ஜசுரோத்தா சட்டமன்றத் தொகுதியிலிருந்து சம்மு காசுமீர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1] இதற்கு முன்பு 2014இல் கத்துவா சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] கீராநகர் நகர் மன்ற குழுவிற்கு நான்கு ஆண்டுகள் தலைமை தாங்கினார். 2018 சூன் 19 அன்று கூட்டணி தோல்வியடையும் வரை 6 வாரங்களுக்கும் மேலாகக் குறுகிய காலத்திற்கு பி. டி. பி-பாஜக கூட்டணி அரசாங்கத்தில் சம்மு-காசுமீரின் வன, சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தார். கத்துவா கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஒரு பேரணியில் பங்கேற்றதால் சர்ச்சைக்கு உள்ளானார்.
ராஜீவ் ஜசுரோதியா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர்-சம்மு காசுமீர் | |
பதவியில் அக்டோபர் 2024 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 அக்டோபர் 1973 |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தொழில் | அரசியல்வாதி |