கதுவா மாவட்டம்
கதுவா மாவட்டம், இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைமையிடமான கதுவா நகரத்திலிருந்து, ஜம்மு நகரம் 82 கிலோ மீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரம் ஸ்ரீநகர் 347 கிலோ மீட்டர் தொலைவிலும், இந்தியத் தலைநகர் புதுதில்லி 496 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மாவட்ட எல்லைகள்
தொகு2,502 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கதுவா மாவட்டம் வடக்கில் உதம்பூர் மாவட்டம், வட கிழக்கில் தோடா மாவட்டம், கிழக்கில் இமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டம், தெற்கில் பஞ்சாப் மாநிலத்தின் குர்தாஸ்பூர் மாவட்டம் மற்றும் தென்மேற்கில் ஆசாத் காஷ்மீர் எல்லைகளாக கொண்டுள்ளது.
மக்கள் வகைப்பாடு
தொகு2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கதுவா மாவட்ட மக்கள் தொகை 616,435 ஆக உள்ளது. அதில் ஆண்கள் 326,109; ஆகவும் பெண்கள் 290,326 ஆகவும் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி, ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 246 நபர்கள் வீதம் உள்ளனர். பாலின விகிதம், ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 890 உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 73.09% விழுக்காடாக உள்ளது. அதில் ஆண்கள் எழுத்தறிவு விகிதம் 81.53% ஆகவும், பெண்கள் எழுத்தறிவு விகிதம் 63.72% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 83,936 ஆக உள்ளனர். [1]
மாவட்ட நிர்வாகம்
தொகுநிர்வாக வசதிக்காக கதுவா மாவட்டம், கதுவா, ஹிரண்சாகர், பில்லவார், பனி, மார்ஹீன், டிங்கா அம்ப், பசோலி, லொகாய் மல்கார், மகான்பூர், நக்ரி மற்றும் ராம்கோட் என பதினோறு வருவாய் வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிராமப்புறங்களில்ம் பஞ்சாயத்து ராஜ் சட்டம் நடைமுறைப்படுத்த, கதுவா , பனி, பார்னொட்டி, பஷோலி, பில்லவார், டுக்கன், காக்வால், ஹிரன்நகர், கதுவா மற்று, லொஹாய் மல்ஹர் என எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த எட்டு ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 512 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது.
மொழிகள்
தொகுகதுவா மாவட்டத்தில் டோக்கிரி, பஹாரி, இந்தி, உருது மற்றும் ஆங்கில மொழிகள் பேசப்பட்டாலும், கல்வி நிலையங்களில் இந்தி, ஆங்கிலம் மற்றும் உருது மொழிகள் பயிற்றுவிக்கப்படுகிறது.
சமயம்
தொகுஜம்மு கோட்டத்தில் உள்ள கதுவா மாவட்டத்தில் இந்துக்கள் பெரும்பான்மையான சமயத்தினராக உள்ளனர். இம்மாவட்டத்தின் மக்கள் தொகையில் இந்துக்கள் 87.61 விழுக்காடும், இசுலாமியர்கள் 10.42 விழுக்காடும், சீக்கியர்கள் 1.55 விழுக்காடும், மற்றவர்கள் 0.12 விழுக்காடுமாக உள்ளனர். [2]
அரசியல்
தொகுகதுவா மாவட்டம் ஐந்து சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. அவைகள்; பனி, பஷொலி, கதுவா, பில்லவார் மற்றும் ஹிரநகர் ஆகும்[3]
போக்குவரத்து வசதிகள்
தொகுகதுவாவிலிருந்து ஸ்ரீநகருக்கும், ஜம்முவிற்கும் பேருந்து சேவைகள் உண்டு, மேலும் கதுவாவிலிருந்து ஜம்முவிற்கு முப்பதிற்கும் மேற்பட்ட தொடருந்து சேவைகள் உள்ளது. [4]
இராணுவ முக்கியத்துவம்
தொகுகதுவா மாவட்டம் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் அமைந்திருப்பதால், பாகிஸ்தானிலிருந்து கதுவா மாவட்டத்தில் நுழையும் தீவிரவாதிகளை கண்காணிக்கவும், தடுக்கவும், எதிர்கொள்ளவும் இந்திய இராணுவத்திற்கும், துணை இராணுவப் படைகளுக்கும் பெரும் சவாலாகவே உள்ளது.
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ http://www.census2011.co.in/census/district/625-kathua.html
- ↑ http://www.census2011.co.in/census/district/625-kathua.html
- ↑ "ERO's and AERO's". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2008-10-22. பார்க்கப்பட்ட நாள் 2008-08-28.
- ↑ http://indiarailinfo.com/search/kathua-kthu-to-jammu-tawi-jat/89/0/81
வெளி இணைப்புகள்
தொகு- கதுவா மாவட்ட இணையதளம் பரணிடப்பட்டது 2009-10-24 at the வந்தவழி இயந்திரம்
- details[தொடர்பிழந்த இணைப்பு]
- Gallery for Basohli paintings பரணிடப்பட்டது 2007-08-06 at the வந்தவழி இயந்திரம்