இராஜேசு ரிசி

(ராஜேஷ் ரிஷி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராஜேசு ரிசி (Rajesh Rishi) (பிறப்பு 18 அக்டோபர் 1964) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்தியாவின் புது தில்லி மாநிலத்தின் ஆறாவது சட்டமன்றத்தின் உறுப்பினராக ஜனக்புரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பாக வென்றுள்ளார்.

இராஜேசு ரிசி
சட்டமன்ற உறுப்பினர் Member
for ஜனக்புரி
பதவியில்
பிப்ரவரி 2015 – தற்போது வரை
முன்னையவர்ஜகதீஷ் முகீ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 அக்டோபர் 1964 (1964-10-18) (அகவை 59)
ஜலந்தர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஆம் ஆத்மி கட்சி
பிள்ளைகள்1 மகன் மற்றும் 1 மகள்
பெற்றோர்(s)இராஜேந்தர் குமார் ரிசி (தந்தை), சோபா ரிசி (தாய்) [1]
வாழிடம்தில்லி
முன்னாள் கல்லூரிடாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி & வணிகர்

இவர் முந்தைய தில்லி அரசில் பாராளுமன்றச் செயலரும் ஆவார். போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையின் மற்றுக்கான நிலைக்குழுவிலும் உறுப்பினர் ஆவார்.

தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

இவர் ஜலந்தரில் 18 அக்டோபர் 1965-இல் பிறந்தார். இவர் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் பயின்று 1985 ஆம் ஆண்டு இளம் அறிவியல் பட்டம் பெற்றார்.[1][2]

அரசியல் வாழ்க்கை தொகு

ரிஷி 2013-ஆம் ஆண்டில் முதன் முதலாக  தேர்தலில் போட்டியிட்டார். இவர் 2015-ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி என்ற கட்சியின் சொர்பில் ஜனக்பூரி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராஜேசு_ரிசி&oldid=3737044" இலிருந்து மீள்விக்கப்பட்டது