ராஜ்யா ராணி விரைவு வண்டி

ராஜ்ய ராணி விரைவுவண்டி (Rajya Rani Express) வகை தொடர்வண்டிகள் இந்தியாவில் , மாநில தலைநகரங்களையும், அம்மாநிலத்தின் முக்கிய நகரங்களையும் இணைக்கும் விரைவுவண்டி ஆகும். இவ்வகை தொடர்வண்டிகள் இந்திய இரயில்வேயால் இயக்கப்படுகிறது.

பெங்களூரு - மைசூரு ராஜ்யா ராணி வண்டி

வரலாறு

தொகு

ராஜ்யா என்ற சொல்லுக்கு மாநிலம் என்று பொருள். ராணி என்றால் அரசி என்று பொருள். ராஜ்யா ராணி தொடர்வண்டி, ஜெய்பூரின் முன்னாள் ராணியும், கூச் பெஹாரின் முன்னாள் இளவரசியுமான காயத்திரி தேவியின் நினைவாக இயக்கப்படுகிறது.[1]

 
நந்தேட் - மும்பை CSMT ராஜ்யா ராணி வண்டி

இவ்வகைத் தொடர்வண்டிகளை இயக்கும் திட்டம், 2011- ஆம் ஆண்டின் மத்திய அரசின் ரயில்வே நிதியறிக்கையில் அறிவிக்கப்பட்டது. நாட்டின் முதல் ராஜ்ய ராணி வகை விரைவு வண்டி பெங்களூருக்கு மைசூருக்கும் இடையில் 01.07.2011 அன்று இயக்கப்பட்டது .

பயன்பாட்டில் உள்ள சேவைகள்

தொகு
வ. எண் வண்டி எண் வழித்தடம்[2] தூரம் ( கி. மீ.) பயன்பாட்டுக்கு வந்த தேதி
1 16557/16558 பெங்களூரு - மைசூரு 139 01 சூலை 2011
2 11003/11004 தாதர் - சாவந்தவாடி ரோடு 497 01 சூலை 2011
3 22861/22862 ஷாலிமார் - ஆத்ரா 283 01 அக்டோபர் 2011
4 22161/22162 போபால் - தமோ 291 12 நவம்பர் 2011
5 16349/16350 கொச்சுவேலி - நிலம்பூர் ரோடு 443 16 நவம்பர் 2011
6 18117/18118 ரூர்கேலா - குனுபூர் 798 16 நவம்பர் 2011
7 15417/15418 அலிபூர்துவார் - சில்காட் டவுன் 460 14 பிப்ரவரி 2012
8 22453/22454 மீரட் - லக்னோ 459 11 மார்ச் 2012
9 176111/17612 நந்தேட் - மும்பை 604 10 ஜனவரி 2020
10 12567/12568 சஹார்ஸா - பாட்னா 214 18 மார்ச் 2012

மேற்கோள்கள்

தொகு
  1. "Trains in honour of Gayatri Devi - Times Of India". web.archive.org. 2012-09-23. Archived from the original on 2012-09-23. பார்க்கப்பட்ட நாள் 2021-06-09.
  2. "Rajya Rani Express to Connect State Capitals With Important Cities of Those States". EquityBulls. 2011-02-25. Archived from the original on 2021-06-09. பார்க்கப்பட்ட நாள் 2021-06-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்யா_ராணி_விரைவு_வண்டி&oldid=3882500" இலிருந்து மீள்விக்கப்பட்டது