மைசூரு–பெங்களூரு ராஜ்யா ராணி விரைவுவண்டி

மைசூரு–பெங்களூரு ராஜ்ய ராணி விரைவுவண்டி (16557/16558)[1] (Mysore–Bangalore Rajya Rani Express) என்பது மைசூர் மற்றும் பெங்களூர் இடையே தினசரி பயணிக்கும் தொடருந்து ஆகும். இந்த தொடருந்து பெங்களூரிலிருந்து காலை 10:30 மணிக்குப் புறப்பட்டு மதியம் 1:30 மணிக்கு மைசூரைச் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் மைசூரிலிருந்து பிற்பகல் 2:30 மணிக்குப் புறப்பட்டு மாலை 5:10 மணிக்குப் பெங்களூரு நகரை வந்தடைகிறது.

மைசூரு–பெங்களூரு ராஜ்யா ராணி விரைவுவண்டி
கண்ணோட்டம்
வகைராஜ்யா ராணி விரைவு வண்டி[1]
முதல் சேவை1 சூலை 2011; 13 ஆண்டுகள் முன்னர் (2011-07-01)
நடத்துனர்(கள்)தென்மேற்கு தொடருந்து மண்டலம்
வழி
தொடக்கம்பெங்களூர் நகரத் தொடருந்து நிலையம்
இடைநிறுத்தங்கள்8
முடிவுமைசூர் சந்திப்பு
ஓடும் தூரம்139 km (86 mi)
சராசரி பயண நேரம்2 மணி 40 நிமிடம்
சேவைகளின் காலஅளவுதினசரி
தொடருந்தின் இலக்கம்16557 / 16558
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)முன்பதிவில்லாப் பொதுப்பெட்டி, குளிரூட்டப்பட்ட 2 அடுக்குப் பெட்டி, குளிரூட்டப்பட்ட 3 அடுக்குப் பெட்டி, இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி
இருக்கை வசதிஉண்டு
படுக்கை வசதிஇல்லை
உணவு வசதிகள்உணவக வசதியுடன்
காணும் வசதிகள்16215/16216 சாமுண்டி விரைவுவண்டி பெட்டிகள் இணைப்பு
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புஐசிஎப் பெட்டிகள்
பாதை1,676 mm (5 ft 6 in)
வேகம்52 km/h (32 mph) average including halts
வழிகாட்டுக் குறிப்புப் படம்
மைசூர்–பெங்களூர் ராஜ்யாராணி விரைவு வண்டி வழித்தடம்

இந்த தொடருந்து பெங்களூரிலிருந்து மைசூர் வரை 16558 என்ற எண்ணிலும், மறுதிசையில் 16557 என்ற எண்ணிலும் இயங்குகிறது. பயண வழியில், இந்த தொடருந்து கெங்கேரி, பிடாடி, இராமநகரம், சென்னபட்டணம், மத்தூர், மாண்டியா, பாண்டவபுரம் மற்றும் ஸ்ரீரங்கப்பட்டணம் ஆகிய இடங்களில் நிற்கிறது.

இதில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட பெட்டி மற்றும் குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி கொண்ட பெட்டி முன்கூட்டியே முன்பதிவு செய்யும் வசதியுடன் கிடைக்கிறது.

வரலாறு

தொகு

ராஜ்ய ராணி விரைவுவண்டி, சுற்றுலா, யாத்திரை அல்லது வணிகத்திற்கு முக்கியமான பிற நகரங்களுடன் மாநில தலைநகரங்களை இணைக்க இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் தொடர் விரைவு வண்டியாகும். இந்த தொடருந்துகள் 2011ம் ஆண்டு ரயில்வே நிதியறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டன.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Rajya Rani Express to Connect State Capitals With Important Cities of Those States". இந்திய அரசு. Press Information Bureau. பார்க்கப்பட்ட நாள் 25 February 2011.