மத்தூர், மண்டியா

மத்தூர் (Maddur) (மேலும் மத்தூரு என உச்சரிக்கப்படுகிறது) என்பது இந்திய மாநிலம் கர்நாடகத்தில் மண்டியா மாவட்டத்தில் உள்ளது. இந்த ஊர் சிம்சா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது மாநில தலைநகரான பெங்களூரிலிருந்து 82 கிலோமீட்டரிலும், சுற்றுலா நகரான மைசூரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. வெடிபொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் இரசாயனங்களைக் குறிக்கும் கன்னட சொல்லான மடுவிலிருந்து இந்த ஊரின் பெயர் பெறப்பட்டது. உக்ரா நரசிம்ம கோவிலில் காணப்பட்ட தமிழ் கல்வெட்டின் படி, ஹொய்சாலா காலத்தில் இந்த நகரம் மருதுர் (மருது + ஓர்) என்று அழைக்கப்பட்டது. பின்னர் மருதுர் மத்தூர் என்ற பெயர் பெறப்பட்டிருக்கலாம்.

மத்தூர் Maddur
மத்தூரு
நகரம்
காய்கறி கடை, மத்தூரில்
காய்கறி கடை, மத்தூரில்
மத்தூர் Maddur is located in கருநாடகம்
மத்தூர் Maddur
மத்தூர் Maddur
இந்தியா, கர்நாடகத்தில் அமைவிடம்
மத்தூர் Maddur is located in இந்தியா
மத்தூர் Maddur
மத்தூர் Maddur
மத்தூர் Maddur (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°35′06″N 77°03′00″E / 12.5849°N 77.05°E / 12.5849; 77.05
நாடு இந்தியா
மாநிலம் கர்நாடகம்
மாவட்டம்மண்டியா
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்மத்தூர் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்6.23 km2 (2.41 sq mi)
ஏற்றம்662 m (2,172 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்Total: 26,456. 14,342 | /♀ 14,412
 • அடர்த்தி4,246.55/km2 (10,998.5/sq mi)
இனங்கள்மத்தூரான்
மொழிகள்
 • அலுவல்கர்நாடகம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்571428
தொலைபேசி குறியீடு08232
வாகனப் பதிவுKA-11
இணையதளம்http://maddurtown.gov.in/
குலாப் ஜமுனுடன் மத்தூர் வடை
மத்தூரில் காபி கடை
மத்தூர் மசூதி
மத்தூரில் உள்ள உக்ரா நரசிம்ம சுவாமி கோயிலில் காணப்படும் தமிழ் கல்வெட்டுகள்.

நிலவியல் தொகு

மத்தூர் 12°35′03″N 77°02′42″E / 12.584169°N 77.0449°E / 12.584169; 77.0449 அமைந்துள்ளது.[1] இது சராசரியாக 662 மீட்டர் உயரத்தில் உள்ளது.

மக்கட்தொகை தொகு

2011 இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி[2] மத்தூரில் 28,754 பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் ஆண்கள் 14,342 பேர், பெண்கள் 14,412 ஆவார். மத்தூரின் கல்வியறிவு விகிதமானது 68%. இது தேசிய கல்வியறிவு விகிதமான 59.5% விட அதிகமாகும். ஆண்கள் எழுத்தறிவு விகிதம்: 73%, பெண்கள் எழுத்தறிவு விகிதம் 63%. மத்தூரில் 6 வயதுக்குக் குறைவானவர்கள் 12%.

பயிர்கள் தொகு

மத்தூர் சமீபத்தில் தேங்காய் சாகுபடிக்குப் பிரபலமானது. இந்தியாவின் பிற மாநிலங்களான பஞ்சாப், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கோவா, தெலுங்கானா, குஜராத் மற்றும் பிற மாநிலங்களுக்குத் தினமும் 300 சுமையுந்துகள் தேங்காய் அனுப்பப்படுகின்றன. மத்தூருக்கு அருகிலுள்ள சிறிய நகரங்கள் தினமும் அதிக அளவில் இளநீருக்கான தேங்காயினை இங்கிருந்து பெறுகின்றனர். மத்தூர் சமீபத்தில் இந்தியாவின் இளநீரின் தலைநகராக விளங்குகிறது.[3][4]

இந்து கோவில்கள் தொகு

இங்குள்ள முக்கியமான கோயில்களில், ஹொய்சாலா காலத்தின் நரசிம்மா கோயில் [5] இன்றும் உள்ளது. இது 7 கறுப்பு கற்களால் ஆன உக்ரா நரசிம்மரின் உயரமான தோற்றத்தினைக் கொண்டது; மாநிலத்தில் சிறந்ததாக நம்பப்படுகிறது.

  • வரதராஜாவாமி கோயில்

மத்தூரின் அற்புதமான வரதராஜா கோயில் ஆரம்ப சோழர் அல்லது சோழருக்கு முந்தைய அமைப்பு. இதன் 12 அடி உயரமான அலியலநாத தெய்வம் முன்னும் பின்னும் அசாதாரண அம்சங்களுடன் நேர்த்தியாகச் செதுக்கப்பட்டுள்ளது. கன்னடத்தில் 'எல்ல தேவர முண்டே நோடு அல்லலநாதனா கிண்டே நோடு' என்று கூற வழிவகுத்தது - 'மற்ற அனைத்து சிலைகளையும் முன்னால் இருந்து பார்க்க வேண்டும், ஆனால் அல்லலநாதா பின்னால் இருந்தும் பார்க்கவேண்டும்'. இந்த கோவிலை விஷ்ணுவர்தன மன்னர் (முன்பு பிட்டி தேவா என்று அழைக்கப்பட்டார்) கட்டினார்.

  • வைத்தியநாதபுரம் - வித்யநாதேஸ்வரர் கோயில்
  • சிவபுரா - மத்தூரில் உள்ள சிவாபூர் வரலாற்று நினைவுச்சின்னமான சத்தியாகிரக சவுதாவிற்குப் புகழ்பெற்றது. மத்தூரின் அடையாள அமைப்பான மகாத்மா காந்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக சத்தியாகிரகத்திற்காக மற்ற சுதந்திர போராட்ட வீரர்களுடன் அமர்ந்திருந்தார். 1938 ஆம் ஆண்டு சிவபுரா கொடி சத்தியாகிரகத்தை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்ட மாண்டியா மாவட்டத்தின் மத்தூர் வட்டத்தின் சிவபுராவில் மைசூரு-பெங்களூரு நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் எழுச்சியூட்டும் நினைவுச்சின்னம்.
  • கொக்கரேபெல்லூர் - கொக்கரே பெல்லூர் மத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரபலமான பறவை சரணாலயம். இது மத்தூர் நகரத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

மத்தூர், மத்தூர் வடைக்குப் பிரபலமானது - இந்த வடையானது பலவிதமான பருப்பு வகைகளால் ஆன சுவையான தீனியாகும்.

சமண கோயில் தொகு

கி.பி 8 ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த சமண கோயில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையால் மத்தூரின் ஆராத்திபுராவில் கண்டுபிடிக்கப்பட்டது. செங்கற்கள் மற்றும் கற்களால் கட்டப்பட்ட இந்த சமண கோயில் 100 அடி நீளமும் 40 அடி அகலமும் உள்ளது. அகழ்வாராய்ச்சிகளில் ஷிலாபாலிகேஸ் (இளம் பெண்களின் கல் சிற்பம்), துவாரபாலகாஸ் (நுழைவாயில் காவலர்கள் ) மற்றும் பாகுபலி இறைவனின் சிலை (3 அடி அகலம், 3.5 அடி உயரம்) ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.[6][7]

2016 ஆம் ஆண்டில், இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ஏஎஸ்ஐ) மேலும் 13 அடி (4.0 m) அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டது. அப்பொழுது 3 முதல் 9 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தினைச் சார்ந்த பாகுபலியின் சிலை – ஆர்த்திபுராவில் பாசாதிகளுக்கு எதிரே அமைந்துள்ள மற்றொரு மலையில் கண்டுபிடிக்கப்பட்டது.[8]

மேலும் காண்க தொகு

  • அஜ்ஜஹள்ளி, மத்தூர்
  • ஹலகுரு

மேற்கோள்கள் தொகு

  1. Falling Rain Genomics, Inc - Maddur
  2. "Census of India 2011: Data from the 2011 Census, including cities, villages, and towns (Provisional)". Census Commission of India.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Tender Coconut capital of India
  4. Maddur market gives Coconut growers a fair deal.
  5. "Sri Ugra Narasimha Temple in Maddur". Tirtha Yatra (in அமெரிக்க ஆங்கிலம்). 2015-09-12. பார்க்கப்பட்ட நாள் 2020-05-16.
  6. Express News Service (7 January 2015), Eighth Century Jain Temple Discovered in Maddur, தி நியூ இந்தியன் எக்சுபிரசு
  7. Girish, M. B. (23 February 2016) [4 December 2015], "Another Jain centre under excavation in Mandya district", தி டெக்கன் குரோனிக்கள்
  8. Girish, M. B. (23 February 2016) [4 December 2015], "Another Jain centre under excavation in Mandya district", தி டெக்கன் குரோனிக்கள்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்தூர்,_மண்டியா&oldid=3806432" இலிருந்து மீள்விக்கப்பட்டது