பாகுபலி
பாகுபலி (ஆங்கிலம்:Bahubali) அல்லது கோமதீஸ்வரர் என அறியப்படும் இவர் சமணர்களால் போற்றப்படும் அருகதர் ஆவார்.
அமைவிடம்
தொகுகர்நாடகத்தில் இவரது சிலை உள்ள இடத்திற்கு மைசூர்-ஹாசன் கிழக்காக 50 மீட்டர் பயணிக்கவேண்டும். பெங்களூரிலிருந்து சுமார் 160 கிமீ தொலைவில் இவ்விடம் உள்ளது. இந்திரகிரி மலையில் உள்ள சரவணபெலகோலா கோமதீஸ்வரர் பொ.ஊ. 978–993-இல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு கீழே அருகில் பெலகோலா என்ற பெரிய வெள்ளைக்குளம் உள்ளது.[1]
புராணம்
தொகுசமணர்களால் போற்றப்படும் 24 தீர்த்தங்கரர்களுள் முதலாமவரான ரிசபதேவருக்கு நூறு புதல்வர்கள், முதலாமவர் பரதன், இரண்டாவது மகன் பாகுபலி.[2]
பரதனுக்கு முடிசூட்டு விழா நடக்க, பாகுபாலி வெகுண்டு சகோதரன் பரதனோடு போரிட்டு வெற்றி வாகை சூடுகிறான். போரில் தோற்ற தமையனின் வாடிய முகம் கண்டு, பகுபாலி துறவறம் மேற்கொண்டதாக புராணங்கள் கூறுகின்றன.[3]
மன்னராக இருந்து துறவறம் பூண்ட பாகுபலி
தொகுபாகுபலி மன்னராக இருந்த பின்னர் துறவறம் பூண்டு தெய்வ நிலையை அடைந்ததாக கோவிலின் வரலாறு கூறுகிறது.
செயின் சமுதாயத்தினரால் போற்றப்படும் 24 தீர்த்தங்கரர்களுள் முதலாமவர் அயோத்திய ராச விசுபநாதர். இவர் ஆதிநாதர் எனவும் அழைக்கப்படுகிறார். இவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி பெயர் யசஸ்வதி மிர்சி. இவரது பூர்விகம் கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டம், தேடபாலா என்னும் கிராமம் ஆகும்.
இவருக்கு 99 மகன்கள், ஒரு மகள் என மொத்தம் 100 பிள்ளைகள் உள்ளனர். மூத்த மகன் பரதன் மற்றும் இரண்டாவது மகன் பாகுபலி ஆவார். ஆதிநாதர் தனது மூத்த மகன் பரதனுக்கு அயோத்தி சாம்ராச்சியத்தையும், பாகுபலிக்கு பவுத்தனபுரா (இன்றைய ஹாசன் மாவட்டம்) சாம்ராச்சியத்தையும் கொடுக்கிறார். அதுபோல மீதமுள்ள 98 பிள்ளைகளுக்கும் சாம்ராச்சியத்தை பிரித்து கொடுத்த பின்னர் ஆதிநாதர் துறவறம் பூண்டு விந்தியகிரி மலையில் தவம் செய்து வருகிறார்.
பின்னர் மாபெரும் சாம்ராச்சியத்தை உருவாக்கி சக்கரவர்த்தியாக ஆசைப்படும் பரதன் பல்வேறு நாடுகளுடன் போரிட்டு வெற்றிவாகை சூடுகிறார். அனைத்து நாடுகளையும் கைப்பற்றிவிட்டதாக கருதி பரதன் பெருமையுடன் அயோத்தி நகருக்குள் நுழையும் போது, அவர் கையில் வைத்திருந்த அபூர்வ சக்தி படைத்த சக்ராயுதம் சுழலாமல் நின்று விடுகிறது.
அதற்கான காரணத்தை பரதன் ஆராய்கிறார். அப்போது தனது தம்பி பாகுபலி ஆளும் பவுத்தனபுரா சாம்ராச்சியத்தை பரதன் கைப்பற்றாதது நினைவுக்கு வருகிறது. இதனால் பவுத்தனபுராவை தன்னிடம் கொடுத்துவிடும் படி கூறி தூதுவன் ஒருவனை பாகுபலியிடம் அனுப்புகிறார். ஆனால் பாகுபலி தனது சாம்ராச்சியத்தை கொடுக்க மறுத்து விடுகிறார். பின்பு சகோதரர்களுக்கிடையே போர் நடைபெறுகிறது. இதில் பாகுபலி வெற்றிவாகை சூடுகிறார். ஆனால் பாகுபலிக்கு இந்த வெற்றி மகிழ்ச்சியைத் தரவில்லை. சொத்துக்காக அண்ணனோடு போர் புரிந்து விட்டோமே என எண்ணி மனம் வருந்துகிறார். இதனால் உலக வாழ்க்கையில் வெறுப்பு கொள்ளும் அவர் சொத்து, சொந்த பந்தங்கள் ஆகியவற்றை உதறிவிட்டு துறவறம் பூண்டு தனது தந்தை ஆதிநாதர் தியானம் செய்து கொண்டிருந்த விந்தியகிரி மலைக்கு சென்று தன் தந்தையிடம் நடந்ததைக் கூறிகிறார். பின்பு தந்தையிடம் பாகுபலி தீட்சிதை பெற்று நிர்வாண நிலையில் நின்ற கோணத்தில் தியானம் மேற்கொள்கிறார்.
பாகுபலி சுமார் ஒரு ஆண்டு நீர் பருகாமல், உணவு உண்ணாமல் தவம் மேற்கொண்டார். இதுபற்றி அறிந்த பரதன், தனது தம்பியைப் பார்க்க விந்தியகிரி மலைக்கு வருகிறார். அங்கு தனது தம்பி பாகுபலியிடம் தன்னை மன்னித்துவிடும் படி கூறுகிறார். பின்பு பவுத்தனபுரா சாம்ராச்சியத்திற்கு வந்து ஆளும்படி கூறுகிறார்.
இதனால் தனது மனதில் இருந்த வலி நீங்கியதாக கூறி பாகுபலி இறுதியில் தெய்வநிலை அடைந்தார் என்று சமணர்களின் ஆதிபுராணம் கூறுகிறது.
கோயில்
தொகுசரவணபெலகுளா எனும் ஊரில் பாகுபலிக்கு வழிபாட்டுத்தலம் அமைக்கப்பட்டுள்ளது, அங்குள்ள ஒற்றைக் கல்லால் ஆன கோமதீஸ்வரர் சிலைக்கு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா மஸ்தகாபிஷேக திருவிழாவில் அபிஷேகம் செய்யப்படுகிறது.
கடைசியாக 2012 ஜனவரி-பிப்ரவரியில் இத்திருவிழா நடைபெற்றுள்ளது. இனி அடுத்து 2025இல் நடக்கவுள்ளது.[1]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- மனபலம் தரும் பகுபாலி தினமலர்[தொடர்பிழந்த இணைப்பு]
- பாகுபலி சிலை அமைப்பு பரணிடப்பட்டது 2013-03-18 at the வந்தவழி இயந்திரம்