ராணா கபூர்
ராணா கபூர் (9 செப்டம்பர் 1957) என்பவர் மும்பையைத் தலைமை இடமாகக் கொண்டுள்ள தனியார் வங்கியான யெஸ் பாங்கின் நிறுவனர் , மேலாண் இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி ஆவார். யெஸ் வங்கியில் ராணா கபூர் 26 விழுக்காடு பங்குகளைக் கொண்டுள்ளார். [1]
ராணா கபூர் | |
---|---|
பிறப்பு | 9 செப்டெம்பர் 1957 (அகவை 67) புது தில்லி |
படித்த இடங்கள் |
|
பிறப்பும் படிப்பும்
தொகுராணா கபூர் புது தில்லியில் பிறந்தார்.பிராங்க் அந்தோணி பொதுப்பள்ளியில் 1973 இல் படித்து முடித்தார். பின்னர் சிறி ராம் வணிகக் கல்லூரியில் பயின்றார் நியூ ஜெர்சியில் ரட்கர்ஸ் பல்கலைக் கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
வங்கிப் பணிகள்
தொகுதொடக்கத்தில் பாங்க் ஆப் அமெரிக்காவில் சேர்ந்தார். அவ் வங்கியில் 1980 முதல் 1996 வரை பணி ஆற்றினார். 1996 இல் அன்ஸ் கிறின்லேஸ் வங்கியில் சேர்ந்து 1998 வரை பணி செய்தார். யெஸ் வங்கியைத் தொடங்குவதற்கு முன் ரபோ இந்தியா பைனான்ஸ் என்னும் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்தார். பின்னர் 2003 இல் ரிசர்வ் பாங்கின் உரிமம் பெற்று யெஸ் பாங்கை 2004 இல் தொடங்கினார்.
பட்டங்களும் பாராட்டுகளும்
தொகு- அனைத்திந்திய மேலாண்மை சங்கம் (அய்மா) மதிப்புறு தகையர் என்ற பட்டத்தை அளித்தது.
- ஜி.பி.பந்த் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்திலிருந்து முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
- ஆண்டின் முதன்மைச் செயல் அதிகாரி என்று சப்ரே ஆசியா பசிபிக் விருதுகள் விழாவில் பாரட்டப் பட்டார்.
- இந்திய வணிக சேம்பர்ஸ் பதின்ம ஆண்டுகளில் முன்னணி வங்கியாளர் என்று பட்டம் வழங்கப்பட்டது.
- 2005 ஆம் ஆண்டில் எர்னஸ்ட் ஆண்டு யங் என்ற மதிப்பீட்டு நிறுவனம் ராணா கபூருக்கு தொடக்கத் தொழில் முனைவோர் என்ற பட்டத்தை அளித்தது.
- யெஸ் வங்கியின் பங்குகள் மதிப்பு உயர்வின் காரணமாக ராணா கபூர் பல லட்சங்களுக்கு அதிபதி ஆனார் என்று 2017 சனவரியில் புளூம்பர்க் அறிவித்தது.
- மகாராட்டிர மாநில வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உதவுவதாக மகாராட்டிர அரசின் ஆளுநரும் முதல்வரும் ராணா கபூருக்கு பாராட்டு விழா எடுத்தனர்.[2]