ராணி உயர்நிலைப் பள்ளி

ராணி உயர்நிலைப் பள்ளி (Rani High school) அசாமில், ராணி பகுதியில் அமைந்துள்ள பள்ளி. இந்த பகுதி அசாம் மேகாலயாவின் எல்லைப்புற பகுதி அருகில் அமைந்துள்ளது.

பள்ளியின் சிறப்பு

தொகு

இந்த பள்ளியின் மாணவிகள் காற்பந்தாட்ட விளையாட்டில் கொண்டுள்ள திறமையும் ஈடுபாடும் சிறப்பாகும்.[1] மிகவும் எளிய குடும்பத்தினராக இருந்தும் இவர்கள் தங்கள் வறுமையையும் தாண்டி இந்த விளையாட்டில் ஈடுபட இவர்களின் பயிற்சியாளர் ஹெம் தாஸின் முயற்சியே காரணம்.

ஹெம் தாஸ் இந்தப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சில கிராமத்தினரின் ஒத்துழைப்போடு கால்பந்து பயிற்சி மையம் ஆரம்பித்தார். தனது சொந்த செலவில் இந்த மாணவிகளை பயிற்றுவிக்கிறார். ஆரம்பத்தில் மாணவர்களைத் தேடிய இவர், மாணவிகள் அதிக ஆர்வம் காட்டுவது அறிந்து அவர்களை பயிற்றுவிக்க ஆரம்பித்தார்.

தேசியப் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் இம்மாணவிகள் பங்கு கொண்டுள்ளனர்.

பதிவுகள்

தொகு

இவர்களைப் பற்றி ராஜ்ய சபா தொலைக்காட்சியின்(RSTV) சார்பில் 26 நிமிட நேர ஆவணப் படம் "Soccer Queens of Rani" தயாரிக்கப் பட்டு ஜூன் 18 அன்று ஒளிபரப்பப் பட்டது.

மேற்சான்றுகள்

தொகு
  1. 21 சூன் 2014. "World Cup 2014 : Film on Assam girls who are 'bending it like Beckham'". PTI. Archived from the original on 2014-06-24. பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2014.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராணி_உயர்நிலைப்_பள்ளி&oldid=3875604" இலிருந்து மீள்விக்கப்பட்டது