ராதிகா ஐயங்கார்

ராதிகா ஐயங்கார் இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த இந்திய பத்திரிகையாளரும் எழுத்தாளருமாவார்.

ராதிகா ஐயங்கார்
தொழில்எழுத்தாளர், ஆய்வாளர்
தேசியம்இந்தியர்
கல்விகொலம்பியா பல்கலைக்கழகத்தின் இதழியல் பட்டதாரி பள்ளி, நியூயார்க் நகரம்
வகைஇதழியல்
குறிப்பிடத்தக்க படைப்புகள்கங்கையில் நெருப்பு (புத்தகம்), (2023)
குறிப்பிடத்தக்க விருதுகள்சிவப்பு மை விருது
இணையதளம்
இணையதளம்

மனித உரிமைகள் பிரிவில் 2018 ஆம் ஆண்டில் சிவப்பு மை (Red Ink Awards' என்ற விருதினைப் பெற்ற இவர், 2016 ஆம் ஆண்டில் பிரபா தத் நிதியுதவி, 2019 ஆம் ஆண்டில் பியான்கா பான்கோட் பாட்டன் நிதியுதவி மற்றும் 2020 இல் சார்லஸ் வாலஸ் இந்தியா டிரஸ்ட் நிதியுதவி ஆகியவைகளை இவரது பல்வேறு ஆய்வுப்பணிகளுக்காகப் பெற்றுள்ளார்.

அல் ஜசீரா, கிறிஸ்டியன் சயின்ஸ் மானிட்டர், வோக் இந்தியா மற்றும் காண்டே நாஸ்ட் டிராவலர் இந்தியா உள்ளிட்ட பல செய்தி இதழ்களிலும் கலை மற்றும் கலாச்சாரம், விளிம்புநிலை சமூகங்கள், வரலாறு மற்றும் பாலினம் பற்றி பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை ராதிகா எழுதியுள்ளார்.

வாரணாசியின் டோம் என்று அழைக்கப்படும் பிணத்தை எரிப்பவர்களின் சமூகத்தின் பின்தங்கிய வாழ்க்கையை வாழும் சமூகத்தைப் பற்றிய ஏழு முதல் எட்டு ஆண்டுகள் நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டில் ஹார்பர்காலின்சு வெளியீட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட கங்கையில் நெருப்பு: பனாரஸில் இறந்தவர்களிடையே வாழ்க்கை என்ற ஆய்வுப்புத்தகத்தின் மூலம் பரவலாகக் கவனிக்கப்பட்டுள்ளார். [1] [2] [3]

படிப்பு தொகு

ராதிகா, இந்தியாவின் டெல்லி பொருளாதாரப் பள்ளியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். மேலும் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் இதழியல் பட்டதாரி பள்ளியில் பத்திரிக்கை துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.[4] [5]


மேற்கோள்கள் தொகு

  1. "Radhika Iyengar". A Suitable Agency. 10 February 2021. Archived from the original on 16 November 2023. பார்க்கப்பட்ட நாள் 16 November 2023.
  2. "‘Witnessing such sights each day has a deep, scarring impact on the children at Manikarnika Ghat,’ says Radhika Iyengar, author of Fire on the Ganges". https://www.thehindu.com/books/books-authors/varanasi-untouchability-dalit-community-banaras-ganges-cremation/article67371656.ece. 
  3. Rathod, Pranav (2018). "Pressclub Mumbai". MumbaiPressclub. Archived from the original on 16 November 2023. பார்க்கப்பட்ட நாள் 16 November 2023.
  4. "ராதிகா ஐயங்கார்". RADHIKA IYENGAR (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-19.
  5. "ராதிகா ஐயங்கார் - ஆராய்ச்சி அறிஞர்". csd.columbia.edu. பார்க்கப்பட்ட நாள் 2024-02-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராதிகா_ஐயங்கார்&oldid=3893413" இலிருந்து மீள்விக்கப்பட்டது