ராபர்ட் வதேரா
(ராபர்ட் வத்ரா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராபர்ட் வதேரா (Robert Vadra) (பி- மே 18 - 1969 ) அல்லது ராபர்ட் வதேரா எனப்படும் இவர் பிரியங்கா காந்தியின் கணவரும், சோனியா காந்தியின் மருமகனும் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரும் ஆவார்.
ராபர்ட் வதேரா | |
---|---|
பிறப்பு | 18 மே 1969 (அகவை 55) மொராதாபாத் |
பணி | வணிகர் |
வாழ்க்கைத் துணை/கள் | பிரியங்கா காந்தி |
குடும்பம்
தொகுஉத்தரப் பிரதேசம் மாநிலம் மொரதாபாத் ஐ பிறப்பிடமாக கொண்ட இவர் பிரியங்கா காந்தியை 1999இல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரைஹன் மற்றும் மிராயா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன.
குற்றச்சாட்டுகள்
தொகுஅரியானா மாநிலத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து ராபர்ட் வதேரா நிலத்தை அபகரித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, இந்த விவகாரம் குறித்து ஏற்பட்ட அமளியால் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. [1]. [2].[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ Haryana land deal: Robert Vadra could face up to 2 years in jail
- ↑ சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா எந்த நேரமும் கைதாகலாம்?[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ ராபர்ட் வத்ரா மீதான குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யானவை: பிரதமர் அலுவலகம் தினமணி 28 November 2012
- ↑ ராபர்ட் வதேரா விவகாரம் : இரு அவைகளும் ஒத்திவைப்பு தினமணி 13 August 2013