ராபா ஆறு
ராபா ஆறு (ஜெர்மன்: ராப், ஹங்கேரியன்: ராபா; ஸ்லோவீன்: ராபா) தென்கிழக்கு ஆஸ்திரியா மற்றும் மேற்கு ஹங்கேரி வழியே ஓடும் ஒரு ஆறு. இது 298.2 கிமீ (185.3 மைல்) நீளம் கொண்டது, இதில் 100 கி.மீ ஆஸ்திரியாவில் உள்ளது.
ராபா | |
---|---|
மொல்னசெக்சோடில் ராபா | |
அமைவு | |
Countries | ஆஸ்திரியா மற்றும் அங்கேரி |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | ஆஸ்திரியா ஆல்ப்ஸ் (டெய்ச்சால்ம்) |
⁃ ஏற்றம் | 1,150 m (3,770 அடி) |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | டான்யூப் (மொஸொனி-டூனா கிளை), ஜியோர் |
⁃ ஆள்கூறுகள் | 47°41′03″N 17°38′04″E / 47.68417°N 17.63444°E |
நீளம் | 298.2 km (185.3 mi) |
வடிநில அளவு | 10,401 km2 (4,016 sq mi) |
வெளியேற்றம் | |
⁃ சராசரி | 18 m3/s (640 cu ft/s) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | லாவ்னிட்சு, பின்கா, ஜியோன்ஜியோசு |
⁃ வலது | மர்கால் |
அலுவல் பெயர் | ராபா பள்ளத்தாக்கு |
தெரியப்பட்டது | 6 அக்டோபர் 2006 |
உசாவு எண் | 1645[1] |
புவியியல்
தொகுடான்யூப் ஆற்றின் வலது கிளை ஆறான இதன் தோற்றுவாய் ஆஸ்திரியாவில் ஹொய்போடென்ஹோஹ குன்றுக்குக் கீழே புருக் ஆன் டெர் மூர் நகரின் கிழக்கே சில கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஆஸ்திரிய மாநிலங்களான இசுடைரியா மற்றும் புர்கன்லாண்ட், மற்றும் ஹங்கேரிய மாவட்டங்களான வாஸ் மற்றும் ஜியோர்-மோஷோன்-சொப்ரோன் ஆகியவற்றின் வழியாகப் பாய்கிறது. இது வடமேற்கு ஹங்கேரியில் ஜியோர் நகரூடாகப் பாய்ந்து டான்யூப் (மொஸொனி-டூனா)விடம் சேர்கிறது. இதன் வடிநிலம் 10,401 km2 (4,016 sq mi) பரப்பளவைக் கொண்டது.[2] ராபாவின் வழியிலுள்ள நகரங்கள் கிளைஸ்டோர்ஃப், பெல்ட்பாக் (இரண்டுமே ஆஸ்திரியாவில் உள்ளது), மற்றும் செண்ட்கோட்டார்ட் மற்றும் கொர்மெண்ட் (ஹங்கேரி) ஆகியவை. புத்துயிர் ஊழிக்காலத்தின் முற்பகுதியில் இந்த ஆற்றின் ஓட்டம் எதிர்புறமாக இருந்தது. ஆனால் புவியொட்டின் ஏற்றம் இந்த ஆற்றின் ஓட்டத்தைத் தற்போதைய போக்குக்கு மாற்றிவிட்டது.
ராபா பள்ளத்தாக்கு
தொகுராபா பள்ளத்தாக்கு பரந்த பகுதியான பிரெக்மூரியேவின் ஒரு பகுதியாக உள்ளது.[3] ராபா பள்ளத்தாக்கில் (Sln. Porabje, Hung Vendvidék) வாழும் ராபா ஸ்லோவீன்கள், மேற்குக் கோடியில் வாழும் ஹங்கேரியன் ஸ்லோவென்களின் குழுவாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Rába valley". ராம்சர் Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 25 May 2020.
- ↑ "Flächenverzeichnis der Flussgebiete: Leitha-, Rabnitz- und Raabgebiet" (PDF). Beiträge zur Hydrografie Österreichs Heft 63. December 2014. p. 137.
- ↑ "Slovenians in Hungary". Ministry of Foreign Affairs, Government of Slovenia. பார்க்கப்பட்ட நாள் 11 February 2011.