ராபின் டேனியல்சன் சட்டம்
ராபின் டேனியல்சன் பெண்மை சுகாதாரத் தயாரிப்பு பாதுகாப்புச் சட்டம் (Robin Danielson Feminine Hygiene Product Safety Act) என்பது அமெரிக்க காங்கிரசால் முன்மொழியப்பட்ட ஒரு பாதுகாப்புச் சட்டமாகும். டையாக்சின்கள், செயற்கை இழைகள், குளோரின் அல்லது எரிச்சலூட்டும் வாசனை இரசாயனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் மாதவிடாய் தொடர்பான சுகாதார தயாரிப்புகளின் சுகாதார அபாயங்களை ஆய்வு செய்ய தேசிய சுகாதார நிறுவனங்களை இச்சட்டம் வழிநடத்துகிறது. மேலும், இதேவகையான சுகாதார தயாரிப்புகளில் டையாக்சின் என்ற வேதிப்பொருளின் அளவைக் கண்காணிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அமைப்பு அழைப்பு விடுத்தது. [1][2][3]
முதன்முதலில் 1997 ஆம் ஆண்டு ராபின் டேனியல்சன் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் 1999 ஆண்டு மறுபெயரிடப்பட்டது . இந்த மசோதாவுக்கு ராபின் டேனியல்சன் நினைவாக அவருடைய பெயரிடப்பட்டது. டேனியல்சன் 1998 ஆம் ஆண்டு நச்சு அதிர்ச்சி நோய்க்குறியால் இறந்தார். இது அதிகம் உறிஞ்சக்கூடிய டம்பன் என்ற மாதவிடாய் தொடர்பு பொருளை பயன்படுத்தியதால் உருவாகிய ஓர் அரிய பாக்டீரியா நோயாகும். [4] அப்போதுமுதல் காங்கிரசின் உறுப்பினரான கரோலின் மலோனி என்ற பெண் இந்த மசோதாவை அறிமுகப்படுத்த பல முறை முயற்சித்தார். ஆனால் இம்மசோதா ஒருபோதும் நிறைவேற்றப்படவில்லை அல்லது குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெறவில்லை. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Al-Faruque, Ferdous (2014-05-28). "Dem proposes studying health effects of menstrual products". TheHill. https://thehill.com/policy/healthcare/207454-dem-proposes-studying-health-effects-of-menstrual-products.
- ↑ "Are Your Menstrual Products Poisoning You?". National Journal. https://www.nationaljournal.com/s/56980/. பார்த்த நாள்: 3 June 2021.
- ↑ Sale, Angela (2016-04-06). "The secrets about feminine hygiene products". Student Scholar Showcase. https://digitalshowcase.lynchburg.edu/studentshowcase/2016/Presentations/3/.
- ↑ Carolyn Maloney (2015-04-20). "You know where your tampon goes. It's time you knew what goes into it, too". The Guardian. https://www.theguardian.com/commentisfree/2015/apr/20/tampon-safety-research-legislation.
- ↑ Reame, Nancy King (2020). "Toxic Shock Syndrome and Tampons: The Birth of a Movement and a Research 'Vagenda'.". The Palgrave Handbook of Critical Menstruation Studies: 540.