ராபின் டேவிட்சன்
ராபின் டேவிட்சன் (Robyn Davidson) என்பவர் ஒரு ஆத்திரேலிய எழுத்தாளர் ஆவார். இவரது 1980 ஆம் ஆண்டிய புத்தகமான ட்ராக்ஸ் என்ற பயண நூலுக்காக மிகவும் பிரபலமானவர். இவர் ஒட்டகங்களைப் பயன்படுத்தி மேற்கு ஆஸ்திரேலியாவின் பாலைவனங்களில் 2,700 கிமீ (1,700 மைல்கள்) பயணம் செய்தார். இவரது பயணங்களும், பயணங்களைப் பற்றிய எழுத்து வாழ்க்கையும் 40 ஆண்டுகள் நீடித்தது. இவரது நினைவுக் குறிப்பான, அன்பினிசிடு உமன் 2023 இன் பிற்பகுதியில் வெளியானது.
ராபின் டேவிட்சன் | |
---|---|
பிறப்பு | 6 செப்டெம்பர் 1950 (அகவை 74) Miles |
பணி | எழுத்தாளர் |
விருதுகள் | Medal of the Order of Australia |
இணையம் | https://robyndavidson.com.au/ |
துவக்ககால வாழ்க்கையும் கல்வியும்
தொகுராபின் டேவிட்சன் ஆத்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள மைல்சில் உள்ள கால்நடை நிலையமான ஸ்டான்லி பூங்காவில் இரண்டு பெண் குழந்தைகளில் இளையவராக பிறந்தார். இவருக்கு 11 வயதாக இருந்தபோது, இவரது தாயார் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். பின்னர் இவரது திருமணமாகாத அத்தையான (இவரது தந்தையின் சகோதரி) கில்லியனால் வளர்க்கப்பட்டார். பிரிஸ்பேனில் உள்ள மகளிர் உறைவிடப் பள்ளியில் பயின்றார். இவர் பிரிஸ்பேனில், டேவிட்சன் உயிரியலாளர்களுடன் ஒரு வீட்டைப் பகிர்ந்து கொண்டு விலங்கியல் பயின்றார்.[சான்று தேவை]
1968 ஆம் ஆண்டில், தன் 18 வயதில், இவர் சிட்னிக்குச் சென்றார். பின்னர் பாடிங்டனில் உள்ள ஒரு சிட்னி புஷ் இல்லத்தில் கட்டுபாடற்ற வாழ்க்கையை வாழ்ந்தார். ஒரு சட்டவிரோத சூதாட்ட விடுதியில் சிட்டுப் பகிர்வராக பணிபுரிந்தார்.[1][2]
1975 ஆம் ஆண்டில், டேவிட்சன் ஆலிஸ் ஸ்பிரிங்சுக்கு குடிபெயர்ந்தார். இவர் திட்டமிட்டிருந்த பாலைவனப் பயணத்திற்காக ஒட்டகங்களுடன் பணிபுரியும் முயற்சியில் ஈடுபட்டார். இரண்டு ஆண்டுகள், இவர் ஒட்டகங்களை பராமரித்து பயிற்சி பெற்றார், மேலும் கடுமையான பாலைவனத்தில் எவ்வாறு உயிர்வாழ்வது என்பதைக் கற்றுக்கொண்டார். இறுதியாண்டில் இவருக்குத் தேவையான ஒட்டகங்களை சல்லே மகோமெட் வழங்கி உதவி செய்தார். டேவிட்சன் பின்னர், மகோமெட்டின் அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் கவனத்தில் கொண்டதாக கூறினார். குறிப்பாக பருவகாலத்தில் காட்டு ஒட்டகங்களின் தன் மந்தைமீது மூர்க்கத்தனத்தை காட்டும் போது அவரது அறிவுரைகள் பயன்பட்டன.[3] மகோமெட் இவருக்கு கேட், ஜெலிகா என்ற இரு ஒட்டகங்களை வழங்கினார்.[4] இந்த காலகட்டத்தில் இவர் பூர்வகுடிகளின் நில உரிமை இயக்கத்தில் புறவயமாக ஈடுபட்டார்.[5]
பயணம்
தொகு1977 இல்,[6] டேவிட்சன் ஆலிஸ் ஸ்பிரிங்ஸில் இருந்து ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரை நோக்கி தனது நாய் டிக்கிட்டி மற்றும் நான்கு ஒட்டகங்களுடன் புறப்பட்டார். இந்தப் பயணத்தைப் பற்றி எழுதும் எண்ணம் இவருக்கு முதலில் இருக்கவில்லை, ஆனால் இறுதியில் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழில் ஒரு பயணக் கட்டுரை எழுத ஒப்புக்கொண்டார். ஆலிஸ் ஸ்பிரிங்சில் ஒளிப்படக் கலைஞர் ரிக் ஸ்மோலனைச் சந்தித்த அவர், பயணத்திற்கான ஒளிப்படக் கலைஞராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பயணத்தின் போது இவருடன் ஸ்மோலன் உறவில் இருந்தார்.[சான்று தேவை]
பயணத்தின்போது இவருக்கு நான்கு ஒட்டகங்களை பராமரிப்பது கடினமான பணியாக இருந்தது. நாள்கணக்கில் உணவும் தண்ணீரும் கிடைக்காமல் சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. மனிதர்களை சந்திக்க வாரக்கணக்கில் ஆகும். வழியில் பழங்குடி மக்களின் உதவிகளைப் பெற்றார். இவ்வாறு மத்திய ஆத்திரேலியாவைக் கடந்து, இந்தியப் பெருங்கடலை அடைய 1,700 மைல்களைக் கடக்கவேண்டி இருந்தது. அதற்கு ஒன்பது மாதங்கள் ஆனது.[7]
நேஷனல் ஜியோகிராஃபிக் இவரது பயணக் கட்டுரையை 1978 இல் வெளியிட்டது.[8] அது வரவேற்பைப் பெற்றது. டேவிட்சன் தன் அனுபவங்கள் குறித்து ஒரு புத்தகத்தை எழுத முடிவு செய்தார். இவர் லண்டனுக்குச் சென்று டிராக்ஸ் என்ற நூலை எழுதியபோது டோரிஸ் லெசிங்குடன் வாழ்ந்தார். டிராக்ஸ் 1980 இல் தாமஸ் குக் பயண புத்தக விருதையும், பார்வையில் படாத சமூக விருதையும் பெற்றது. 1992 இல் ஸ்மோலன் தனது பயணப் படங்களை ஆலிஸ் டு ஓஷன் என்ற புத்தகத்தில் வெளியிட்டார். இதில் பொது மக்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒளிப்பட குறுவட்டும் அடங்கும். [சான்று தேவை]
திரைப்படத் தழுவல்
தொகு2013 ஆம் ஆண்டு டேவிட்சன் புத்தகத்தைத் தழுவி டிராக்ஸ் என்ற திரைப்படம் வெளியானது. ஜான் குர்ரன் இயக்கிய அப்படத்தில் மியா வாசிகோவ்ஸ்கா நடித்தார்.[9] இது வெனிஸ் திரைப்படவிழாவில் அறிமுகமானது.[10]
நாடோடிகள்
தொகுடேவிட்சனின் பெரும்பாலும் நாடோடி மக்களுடன் பயணம் செய்து அவர்களைப் புரிந்து கொள்வதைப் பணியாக கொண்டிருந்தார். தி ஏஜ் செய்தித்தாளில், ஜேன் சல்லிவன் எழுதுகையில், "அவர் ஒரு சமூக மானுடவியலாளர் என்று அவ்வப்போது அழைக்கப்படுகிறார்", அவருக்கு அதற்கான கல்வித் தகுதி எதுவும் இல்லை, என்றாலும் அவர் "முற்றிலும் தானக கற்றுக்கொண்டவர்" என்று கூறினார் .[6] நாடோடிகளுடனான டேவிட்சனின் அனுபவங்களில் 1990 முதல் 1992 வரை இந்தியாவில் நாடோடிகளுடன் இடம்பெயர்ந்த பயணங்களும் உள்ளன. அந்த அனுபவங்கள் டசர்ட் பிளேஸ் என்ற நூலில் வெளியிடப்பட்டன .
ஆத்திரேலியா, இந்தியா, திபெத்தில் உள்ள நாடோடி வாழ்க்கை முறையின் வெவ்வேறு வடிவங்களை புத்தகம் மற்றும் ஆவணத் தொடருக்காக இவர் ஆராய்ந்துள்ளார். நாடோடிகள் குறித்த இவரது எழுத்து முக்கியமாக தனிப்பட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் குவாட்டர்லி எஸ்சே இதழில் வெளியான இவரது கட்டுரைத் தொடரில் இவரது பங்களிப்பான நோ ஃபிக்ஸட் அட்ரஸ் என்னும் கட்டுரைத் தொடரில் இவர் தனது பல எண்ணங்களை எழுதியுள்ளார்.[6]
விருதுகள்
தொகு2024 ஜூனில் கிங்ஸ் பிறந்தநாள் கௌரவப் பட்டியலில் டேவிட்சன் மெடல் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா (OAM) பெற்றார்..[11]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகு1980 களில் மூன்று ஆண்டுகள் இந்திய புதின ஆசிரியர் சல்மான் ருஷ்டியுடன் உறவில் இருந்தார்.[12] இவருக்கு அவரை பரஸ்பர நண்பரான புரூஸ் சாட்வினால் அறிமுகப்படுத்தப்பட்டார்.[13]
டேவிட்சன் அடிக்கடி இடம் பெயர்ந்து வருகிறார். மேலும் சிட்னி, இலண்டன், இந்தியாவில் வீடுகளைக் கொண்டிருந்தார்.[6] ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவில் உள்ள காசில்மைனில் வசித்து வந்தார்.[14]
நூலியல்
தொகு- Davidson, Robyn (1980). Tracks. Vintage.
- —; Thomas Keneally; Patsy Adam-Smith (1987). Australia: Beyond the Dreamtime. Facts on File.
- — (September 1993). Travelling Light, a collection of essays. Harpercollins; Paperback Original edition.
- — (1990). Ancestors. Australian Large Print.
- — (1 November 1997). Desert Places, Pastoral Nomads in India (the Rabari). Penguin.
- — (5 July 2002). The Picador Book of Journeys. Picador; New Ed edition.
- — (2023). Unfinished Woman. Bloomsbury.
- Screenplays
- Mail Order Bride (1987 feature film for Australian Broadcasting Corporation)[15]
மேற்கோள்கள்
தொகு- ↑ Krien, Anna (2012-01-01). "Robyn Davidson is a nomad". Dumbo Feather. பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.
- ↑ "Robyn Davidson". Australian Museum. பார்க்கப்பட்ட நாள் 2023-11-15.
- ↑ Stevens, Christine (1989), Tin mosques & ghantowns : a history of Afghan cameldrivers in Australia, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-554976-8
- ↑ "Tracks: a woman's solo trek across 1700 miles of Australian Outback: chapter 3, summary and analysis". LitCharts (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-06.
- ↑ "Robyn Davidson character analysis". LitCharts (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-06.
- ↑ 6.0 6.1 6.2 6.3 . 2006-12-09.
- ↑ "பக்கத்து வீடு: 4 ஒட்டகங்கள்... 9 மாதங்கள்... ஆளற்ற பாலைவனம்". 2024-02-04.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help); Text "அமைதியைத் தேடி ஒரு பயணம்" ignored (help) - ↑ Davidson, Robyn (May 1978). "Tracks". National Geographic.
- ↑ Lodderhose, Diana (3 May 2012). "Mia Wasikowska heads Down Under for Tracks". Variety. https://www.variety.com/article/VR1118054558.
- ↑ "Four Australian films screen at Venice". 9 News. 2013-07-26. https://www.9news.com.au/entertainment/four-australian-films-screen-at-venice/2e5e7d8c-c34e-4fae-b00b-b8aff50e31b2.
- ↑ King's Birthday 2024 Honours List, The Office of the Official Secretary to the Governor-General. 10 June 2024. Retrieved 10 June 2024.
- ↑ "Travels of the heart". The Sydney Morning Herald. 7 February 2014. பார்க்கப்பட்ட நாள் 10 June 2024.
- ↑ Bruce Chatwin, letter to Ninette Dutton, 1 November 1984, in Under the Sun: The Letters of Bruce Chatwin, ed. Elizabeth Chatwin and Nicholas Shakespeare, p. 395
- ↑ "Travels of the heart" by Amanda Hooton, The Age, GoodWeekend, 8 February 2014.
- ↑ இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Mail Order Bride