இராப்பா நூயீ

(ராப்ப நூயீ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இராப்பா நூயீ அல்லது இராப்பநூயீ மக்கள் என்போர் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஈசுட்டர் தீவைச் சேர்ந்த பழங்குடியினர். ஈசுட்டர் தீவின் மக்கள் தொகையில் 60 விழுக்காட்டினரான இவர்கள் இராப்பா நூயீ மொழியைப் பேசுகின்றனர். இச்சுட்டர் தீவில் இப்பொழுதும் இருக்கும், கற்களால் செய்த 887 மிகப்பெரிய முகங்களை, "மோவாயி" (Moai) என்று அழைக்கப்படும் சொல் இந்த இராப்பா நூயீ மொழிச்சொல்லே. 2002 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி மொத்தம் 3,304 இராப்பா நூயீ மக்கள் இருந்தனர்.

இம் மக்களின் முக்கிய வருமானம் சுற்றுலா மூலமே ஈட்டப்படுகிறது. சிலி நாட்டுக் குடிமக்களாகிய இவர்கள் தங்களுக்கு சுய நிர்ணய உரிமை கேட்டுப் போராடி வருகிறார்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராப்பா_நூயீ&oldid=4105082" இலிருந்து மீள்விக்கப்பட்டது