ராமசாமி ஓந்திரியர்
ராமசாமி ஓந்திரியர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவர் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருமங்கலகோட்டை கீழையூர் ஊராட்சி கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். [1]
இந்திய விடுதலைப் போராட்டம்
தொகுஇவர் ஆங்கிலேய இந்திய இராணுவத்தில் ஒரு சிவிலியன் ஊழியராக இருந்தார். அவர் ஆங்கிலேய சேவையை விட்டு வெளியேறி மலாயாவில் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தார். ஒரு சிப்பாயாக, அவர் எஸ்.எஸ் குழுவின் சிறப்புப் பிரிவில் பணியாற்றினார் மற்றும் உளவுத்துறை பணிக்காக இந்தியாவில் தரையிறங்கினார். இருப்பினும் ஓந்திரியர் ஆங்கிலேய அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்பு மரணதண்டனை விதிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.[1][2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Dictionary of Martyrs of India's Freedom Struggle 5 volsl. MINISTRY OF CULTURE, GOVERNMENT OF IDNIA AND INDIAN COUNCIL OF HISTORICAL RESEARCH.
- ↑ History of the Indian Revolutionary movement. SOMAIYA PUBLICATIONS.