சிறீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக் கழகம்

(ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வுக்கழகம் (SRMC & RI), தற்போது ஸ்ரீ இராமச்சந்திரா பல்கலைக்கழகம் (SRU), சென்னையின் போரூரில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரியாகும். இந்த நிறுவனம் செப்டம்பர் 11, 1985இல் இராமசாமி உடையாரின் ஸ்ரீ இராமச்சந்திரா கல்வி & உடல்நல அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. செப்டம்பர் 1994இல் பல்கலைக்கழக மானியக் குழு 1956 சட்டத்தின் பிரிவு மூன்றின்படி நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது. இதில் எட்டு கல்லூரிகளும், 45 மருத்துவத் துறைகளும் உள்ளன. 3,500 மாணவர்களுக்கு 92 பாடத்திட்டங்களில் மருத்துவக் கல்வி வழங்குகின்றது.

ஸ்ரீ இராமச்சந்திரா பல்கலைக்கழகம்
SRU logo
குறிக்கோளுரைஉயர் கல்வியில் உயர் தகைமைகள்
Higher Values in Higher Education
வகைதனியார்
உருவாக்கம்1985
நிதிக் கொடை$24,717,000
நிருவாகப் பணியாளர்
1,020
பட்ட மாணவர்கள்2,500
பட்டப்பின் படிப்பு மாணவர்கள்500
அமைவிடம், ,
வளாகம்போரூர், ஸ்ரீ இராமச்சந்திரா நகர் வளாகத்தில் 175 ஏக்கர்கள் (0.71 km2) பரப்பில் 123 கட்டிடங்கள்
இணையதளம்www.srmc.edu