ராமலீலா (திரைப்படம்)

ராமலீலா ( Ramaleela) என்பது 2017 ஆண்டைய இந்திய மலையாள அரசியல் திரைப்படமாகும். இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பவர் சச்சி. படத்தை அருண் கோபி இயக்கியுள்ளார். இப்படத்தில் திலீப், முகேஷ், கலாபவன் ஷாஜோன், பிரயாக மார்ட்டின் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். முலகுப்பதம் பிலிம்ஸ் தயாரிப்பில் டோமிச்சன் முலூபப்பாடுவால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. நடிகர் திலீப் பிரபல நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்டதால், படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது.[3] படத்தை புறக்கணிக்குமாறு பலரால் அழைக்கப்பட்ட போதிலும், இந்த படம் 2017 செப்டம்பர் 28 அன்று இந்தியாவில் வெளியிடப்பட்டது.[1]

ராமலீலா
இயக்கம்அருண் கோபி
தயாரிப்புடோமிச்சன் முலூபப்பாடம்
கதைசச்சி
இசைகோபி சுந்தர்
நடிப்புதிலீப்
முகேஷ்
பிரயாகா மார்டின்
ராதிகா சரத்குமார்
சித்திக்
கலாபவன் ஷாஜன்
ஒளிப்பதிவுஷாஜி குமார்
படத்தொகுப்புவிவேக் ஹர்சன்
கலையகம்முலகுப்பதம் பிலிம்ஸ்
விநியோகம்முலகுப்பதம் வெளியீடு
வெளியீடு28 செப்டம்பர் 2017 (2017-09-28)(India)
ஓட்டம்160 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
ஆக்கச்செலவு14 கோடி[1][2]

கதை தொகு

கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலக்கப்பட்டதால், காங்கிரஸ் கட்சியில் சேரும் ராமன் உண்ணி (திலீப்) அக்கட்சியின் இடைத்தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார். ராமண் உண்ணியின் தாய் ராகினி (ராதிகா சரத்குமார்) உட்பட கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் வெளிப்படையான எதிர்ப்பையும் காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் வாய்ப்பைப் பறிகொடுத்தவர்களின் மறைமுக எதிர்ப்பையும் மீறி, அதிக ஆதரவாளர்களைப் பெற்று வெற்றிவாய்ப்பை நோக்கி நகர்கிறான். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர், பொது இடத்தில் சுட்டுக் கொல்லப்படுகிறார். கொலைப்பழி ராமன் மீது விழுகிறது. அதிலிருந்து ராமன் மீண்டானா, உண்மையான கொலையாளி யார், தேர்தல் முடிவு என்ன ஆகிய கேள்விகளுக்கான பதில்களுடன் முடிகிறது படம்

தயாரிப்பு தொகு

படமானது முலகுப்பதம் பிலிம்ஸ் தயாரிப்பில் டோமிச்சன் முலூபப்பாடுவால் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது.[4] இப்படம் 14 கோடி செலவில் தயாரிக்கப்பட்டது. படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.

வெளியீடு தொகு

ராம்லீலா இந்தியாவில் 2017 செப்டம்பர் 28 அன்று வெளியிடப்பட்டது.[5] கேரளத்தில் 129 திரையரங்குகளில் வெளியானது.[6]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 P. K. Ajith Kumar (October 8, 2017). “Despite delay in release, Dileep-starrer ‘Ramaleela’ proves a money spinner”. The Hindu. Retrieved October 18, 2017.
  2. “Controversies surrounding Dileep won't affect Ramaleela: producer...”. Malayala Manorama. July 10, 2017. Retrieved October 18 2017.
  3. Neethu Reghukumar (September 23, 2017). “Actor Dileep's Ex-wife Appeals Against Boycott Call for his Film 'Ramleela'”. CNN-News 18. Retrieved October 18, 2017.
  4. "Dileep in jail, his new film Ramaleela may hit the screens after Onam". Hindustan Times. Retrieved 7 September 2017.
  5. “Dileep starrer Ramaleela to hit the screens on September 28”. The New Indian Express. September 13, 2017. Retrieved October 18, 2017.
  6. James, Anu (29 September 2017). "These factors helped Dileep's Ramaleela at Kerala box office even after boycott campaign!". International Business Times. http://www.ibtimes.co.in/these-factors-helped-dileeps-ramaleela-kerala-box-office-even-after-boycott-campaign-743784. பார்த்த நாள்: 12 October 2017. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமலீலா_(திரைப்படம்)&oldid=3660787" இலிருந்து மீள்விக்கப்பட்டது