ராமேசுவரம் தொலைக்காட்சி கோபுரம்

ராமேசுவரம் தொலைக்காட்சி கோபுரம் (Rameswaram TV Tower) தமிழ்நாட்டில் உள்ள ராமேசுவரத்தின் சல்லிமலையில் உள்ளது. இந்த கோபுரம் 323 மீட்டர் (1059.7 அடி) உயரம் உடையது.[1] ராமேசுவரம் தொலைக்காட்சி கோபுரம் இந்தியாவில் உள்ள உயரமான கட்டமைப்புகளுள் ஒன்றாகும். இந்த கோபுரம் தூர்தர்ஷனால் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த கட்டமைப்பு வலுவான கான்கிரீட் சிமெண்ட் கலவையால் உருவாக்கப்பட்டது.

ராமேசுவரம் தொலைக்காட்சி கோபுரம்
Rameswaram tv tower
ராமேசுவரம் தொலைக்காட்சி கோபுரம்
Map
பொதுவான தகவல்கள்
வகைதொலைக்காட்சி ஒளிபரப்பு
இடம்ராமேசுவரம், தமிழ்நாடு, இந்தியா
நிறைவுற்றது1995
உயரம்
அலைக்கம்ப கோபுரம்323 m (1,059.7 அடி)

நிலவியல் தொகு

இராமேசுவரம் தொலைக்காட்சி கோபுரம் இராமேசுவரம் நகரத்தில் அமைந்துள்ளது. இது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் நிர்வாக மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கடற்கரையோர நகராட்சி ஆகும்.[1]

ஒளிபரப்பு தொகு

இங்கிருந்து 1995 ஆண்டிலிருந்து தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் அனைத்திந்திய வானொலி சேவைகள் ஒளி,ஒலி பரப்பட்டுகின்றன. இலங்கைக்கும் இங்கிருந்து ஒளிபரப்பு சேவை கிடைத்துவந்தது. இந்தக் கோபுரத்தின் உச்சியில் உள்ள விளக்கு இராமேசுவரம் மீனவர்களுக்கு கலங்கரை விளக்குபோல விளங்கியது. இந்தியா முழுவதும் உள்ள தூர்தர்சனின் தரைவழி ஒளிபரப்பு சேவையை மூட ஒன்றிய அரசு முடிவெடுத்ததால் இராமேசுவம் கோபுரத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பபானது 2021 திசம்பர் 31 முதல் நிறுப்பட்டடுவதாக அறிவிக்கப்பட்டது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 [1].
  2. "இந்தியா முழுவதும் தூர்தர்ஷன் தரைவழி ஒளிபரப்பு நிறுத்தம்: 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலைக்கு சிக்கல்". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-12.

வெளி இணைப்புகள் தொகு