ராம்பூர் மனிஹாரான் சட்டமன்றத் தொகுதி
- ராம்பூர் சட்டமன்றத் தொகுதி, ராம்பூர் காஸ் சட்டமன்றத் தொகுதி, ராம்பூர் கர்கானா சட்டமன்றத் தொகுதி ஆகிய தொகுதிகளுடன் குழப்பிக் கொள்ளாதீர்.
ராம்பூர் மனிஹாரான் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது சகாரன்பூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி.
பகுதிகள்
தொகுஇந்த தொகுதியில் சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.
- தேவ்பந்து வட்டத்தில் உள்ள நகல், ராம்பூர் ஆகிய கனுங்கோ வட்டங்கள், ராம்பூர் மனிஹாரான் நகராட்சி
- சகாரன்பூர் வட்டத்தில் உள்ள சகாரன்பூர் கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட லந்தோரா குஜ்ஜார், கங்கர் கூய், சப்தல்பூர் சிவதாஸ்பூர், சித் பானா, கபாசா, லக்னவுர், தாப்கி ஜுன்னார்தார், ஹசன்பூர் பலஸ்வா, நல்ஹேடா குஜ்ஜார், சகஜ்வா, பீட்டியா, மால்ஹிபூர், சுனேதி கடா, முபாரக்பூர், சேக்புரா கதீம் ஆகிய பத்வார் வட்டங்கள். [1]
(பின்குறிப்பு: கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவாகும். பத்வார் வட்டம் என்பது கனுங்கோ வட்டத்தின் உட்பிரிவாகும்.)
சட்டமன்ற உறுப்பினர்
தொகுஇந்த தொகுதியில் இருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
- உத்தரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றத்தில், இந்த தொகுதியை ரவீந்திர குமார் மோலி முன்னிறுத்துகிறார்.[2]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-14.
- ↑ "தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம்". Archived from the original on 2015-08-13. பார்க்கப்பட்ட நாள் 2015-02-01.