ராம் சந்திர பவுட்யால்
ஆர். சி. பவுட்யால் என்று அறியப்படும் ராம் சந்திர பவுட்யால் (Ram Chandra Poudyal, 1944–2024),[1] என்பவர் சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மாநிலத்தின் அரசியல் நிலப்பரப்பில், குறிப்பாக சிக்கிம் இந்திய ஒன்றியத்துடன் ஒருங்கிணைக்கபட்ட பின்னணியிலும் அதைத் தொடர்ந்து அரசியலமைப்பு மற்றும் சட்ட முன்னேற்றங்களில் இவர் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார். 1980 களின் பிற்பகுதியில் செயல்பட்ட அரசியல் கட்சியான உதய சூரியன் கட்சியை (ஆர்எஸ்பி) நிறுவி வழிநடத்துவதில் இவர் மிகவும் முதன்மை இடத்தை வகித்தார்.[2]
ராம் சந்திர பவுட்யால் | |
---|---|
உதைய சூரியன் கட்சித் தலைவர் | |
பதவியில் 1989–1990 | |
சிக்கிம் காங்கிரஸ் (புரட்சிகர) தலைவர் | |
பதவியில் 1979–1981 | |
சிக்கிம் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 1975–1979 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பின்னவர் | ஜகத் பந்து பிரதான் |
தொகுதி | லூசிங்-பச்சேகானி |
சிக்கிம் சட்டமன்றத்தின் முதலாவது துணை சபாநாயகர் | |
பதவியில் 1975–1977 | |
பின்னவர் | கல்சாங் கியாட்சோ |
சிக்கிம் மாநில கவுன்சில் உறுப்பினர் | |
பதவியில் 1974–1975 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
தொகுதி | லூசிங்-பச்சேகானி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1943/1944 (அகவை 79–81) சோட்டா சிங்டம், சிக்கிம் இராச்சியம் |
தேசியம் | இந்தியர் சிக்கிமியர் (1975வரை) |
அரசியல் கட்சி | உதய சூரியன் கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | சிக்கிம் தேசிய காங்கிரசு, சிக்கிம் காங்கிரஸ் (புரட்சிகர) |
இந்திய ஒன்றியம் எதிர் ஆர். சி. பவுடியால் (1993) வழக்கிற்காக இவர் பிரபலமாக அறியபடுகிறார். அதில் இவர் சிக்கிம் சட்டமன்றத்தின் இட ஒதுக்கீடு கொள்கைகளை சவால் செய்தார். அதில் பூட்டியா-லெப்சா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு பாரபட்சமானது என்றும் இந்திய அரசியலமைப்பின் கீழ் நியாயமான பிரதிநிதித்துவத்தின் கொள்கைகளை மீறுவதாகவும் இவர் வாதிட்டார். இருப்பினும் உச்சநீதிமன்றம், சிக்கிமின் தனித்துவமான வரலாற்று மற்றும் பண்பாட்டுச் சூழலை கருத்தில் கொண்டு, இடஒதுக்கீடை உறுதி செய்தது.[3]
தேர்தல் பதிவுகள்
தொகு- மாநில கவுன்சில் தேர்தல்
ஆண்டு | தொகுதி | அரசியல் கட்சி | முடிவு | நிலை | வாக்குகள் | % வாக்குகள் | % விளிம்பு | வைப்பு | ஆதாரம் | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1974 | லூசிங்-பச்சேகானி | சிக்கிம் தேசிய காங்கிரசு | வெற்றி | - |
- சிக்கிம் சட்டமன்றம் தேர்தல்
ஆண்டு | தொகுதி | அரசியல் கட்சி | முடிவு | நிலை | வாக்குகள் | % வாக்குகள் | % விளிம்பு | வைப்பு | ஆதாரம் | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
1985 | லூசிங்-பச்சேகானி | இதேகா | தோல்வி | 2வது | 845 | 31.46 | ||||
1989 | உதய சூரியன் கட்சி | தோல்வி | 2வது | 1566 | 42.16 | |||||
பார்மியோக் | தோல்வி | 2வது | 1001 | 26.42 | ||||||
1994 | லூசிங்-பச்சேகானி | புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (இந்தியா) | தோல்வி | 3வது | 1378 | 28.81 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Sikkim's Veteran Leader RC Poudyal Found Dead in Teesta Canal | Politics". Devdiscourse (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-17.
- ↑ "CHAPTER-4 STATE PARTY DOMINANCE: CASE of SIKKIM SANGRAM PARIS HAD CHAPTER 4 State Party Dominance: Case of Sikkim Sangram Parishad". Docslib (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-09.
- ↑ IJLMH (2021-02-13). "Case Commentary on R.C. Poudyal v. Union of India". International Journal of Law Management & Humanities (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-09.