ராம் மந்திர் தொடருந்து நிலையம்

மும்பை தொடருந்து நிலையம்

ராம் மந்திர் தொடருந்து நிலையம் என்பது மும்பை புறநகர் ரயில்வே அமைப்பில் மேற்கு மற்றும் துறைமுக வழித்தடங்களில் அமைந்துள்ளது. இது ஓசிவாரா பகுதிக்கு பயன்படுத்தப்படுவதற்காக உள்ளது. இது ஜோகேஸ்வரி மற்றும் கோரேகோன் தொடருந்து நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் அழுத்தத்திற்கு பிறகு அருகிலுள்ள நூற்றாண்டு பழமையான ராமர் கோயிலுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் இந்த தொடருந்து நிலையம் ராம் மந்திர் என்று பெயரிடப்பட்டது. இது 22 டிசம்பர் 2016 ஆம் ஆண்டு பயணிகளுக்காக திறக்கப்பட்டது.

உசாத்துணை தொகு