ராய்டாக் ஆறு
ராய்டாக் ஆறு (Raidak Rive) பிரம்பபுத்திரா நதியின் கிளை ஆறு ஆகும். இது இந்தியா, பூட்டான் மற்றும் வங்காளதேசம் வழியாகச் செல்கிறது. இது இமயமலையில் உற்பத்தியாகிறது. இதன் இன்னொரு பெயர் வாங் சூ ஆகும். பூட்டனில் இது திம்பு சூ எனவும் அழைக்கப்படுகிறது. இது மேற்கு வங்காளத்தில் ஜால்பாய்குரி மற்றும் கூச் பேகர் மாவட்டம் வழியாக வங்காளதேசம் செல்கிறது. வங்காளதேசத்தில் குரிகிராம் மாவட்டதின் வழியாக செல்லும் இந்த ஆற்றை தூத்குமார் ஆறு என்று அழைக்கின்றனர்.[1][2][3][4] [5]இந்த ஆறானது மொத்தம் 370 (230 மைல்கள்) கிலோமீட்டர் தூரம் ஓடுகின்றது.[6]
சுக்கா நீர்மின் நிலையம்
தொகுஇந்த ஆற்றின் குறுக்கே சுக்கா நீர்மின் நிலையம் பூட்டானில் அமைந்துள்ளது. இந்த நீர்மின் நிலையமானது இந்தியாவால் கட்டப்பட்டது. மொத்தத் தொகையில் 60% இந்தியாவும் மீதி 40 % கடனாகவும் பெறப்பட்டது. இதிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரம் பூட்டானின் தேவைக்குப் போக மீதி இந்தியாவிற்கு மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. திம்புவிற்கும் இந்திய எல்கைக்கும் இடையே இந்த நீர்மின்சக்தி நிலையம் 1974-ல் கட்டத் தொடங்கி 1988-ல் கட்டிமுடிக்கப்பட்டது. இது பூட்டானின் சிமாகோட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. இதிலிருந்து 336 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sharad K. Jain, Pushpendra K. Agarwal, Vijay P. Singh. "Hydrology and Water Resources of India". p. 428. Google books. பார்க்கப்பட்ட நாள் 2010-05-09.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Jalpaiguri district". Jalpaiguri district administration. பார்க்கப்பட்ட நாள் 2010-05-09.
- ↑ "Cooch Behar district". Cooch Behar district administration. பார்க்கப்பட்ட நாள் 2010-05-09.
- ↑ Gulia, K.S. "Discovering Himalaya, Volume 2". p 112. Google books. பார்க்கப்பட்ட நாள் 2010-05-09.
- ↑ "Dudhkumar River". Banglapedia. Archived from the original on 2011-07-25. பார்க்கப்பட்ட நாள் 2010-05-09.
- ↑ "River Systems". பார்க்கப்பட்ட நாள் 2010-05-09.