ராய்மங்கல் நதி
பங்களாதேஷில் ஒரு நதி
ராய்மங்கல் நதி (Raimangal River;வங்காளம்: রায়মঙ্গল নদী) இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள தெற்கு 24 பர்கனா மாவட்டத்தில் சுந்தரவனக் காடுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் அலையோட்ட கழிமுக நதியாக ராய்மங்கல் நதி பாய்கிறது. தெற்காசியாவின் வங்காளதேச நாட்டின் அறுபத்தி நான்கு மாவட்டங்களில் ஒன்றான சத்கீரா மாவட்டம்|சத்கீரா மாவட்டத்திலும்]] இந்நதி பாய்கிறது.
இச்சாமட்டி என்ற நதியானது இங்கல்கஞ்சு நகருக்கு கீழே பல கிளையாறுகளாகப் பிரிகிறது. வித்யாதாரி நதி, ராய்மங்கல் நதி, கில்லா நதி, கலிந்தி நதி, மற்றும் சமுனா ஆகியவை இவற்றில் சில முக்கியமான கிளைநதிகளாகும். சுந்தரவனக்காடுகளில் இவை பெரிதும் பரந்து விரிந்து பாய்கின்றன[1]. இந்தியா, வங்காளதேச நாடுகளுக்கிடையில் ராய்மங்கல் நதி சிறிது தொலைவிற்கு சர்வதேச எல்லையாகவும் திகழ்கிறது[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ The Sundarbans of India: a development analysis By Asim Kumar Mandal. பார்க்கப்பட்ட நாள் 2009-11-18.
- ↑ Md Abdur Rob (2012). "Ganges-Padma River System". In Sirajul Islam and Ahmed A. Jamal (ed.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.