ராவ்வா எண்ணெய் வயல்

ராவ்வா எண்ணெய் வயல் (Ravva oil field) இந்தியாவின் கடலோர ஆந்திராவில் கிருட்டிணா கோதாவரி ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

ராவ்வா எண்ணெய் வயல்
Ravva oil field
நாடுஇந்தியா
பிரிவுஆந்திரப் பிரதேசம்
அமைவிடம்சுராசானியானம் கிராமம், கிழக்கு கோதாவரி மாவட்டம்
BlockPKGM-1
அக்கரை/இக்கரைகரையண்மை
ஆள்கூறுகள்16°29′17″N 82°05′23″E / 16.4879328°N 82.0896668°E / 16.4879328; 82.0896668
இயக்குபவர்கெய்ர்ன் ஆற்றல்
பங்குதாரர்கள்கெய்ர்ன் இந்தியா, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம், வீடியோகான் மற்றும் சிங்கப்பூர் ராவ்வா எண்ணெய் நிறுவனம்
Service contractorsபெட்ரோடிரில், விபி பெட்ரோ6 பொறியாளர்கள்
வரலாறு
கண்டுபிடிப்பு1987
வளர்ச்சி ஆரம்பம்1993
உற்பத்தி ஆரம்பம்1994
உற்பத்தி
தற்போதைய எண்ணெய் உற்பத்தி25,986 bbl/d (~1.295×10^6 t/a)
தற்போதைய எண்ணெய் உற்பத்தி ஆண்டு2015[1]

உரிமையாளர்

தொகு

ராவ்வா எண்ணெய் வயலை 22.5% பங்குகளுடன் கெய்ர்ன் இந்தியா நிறுவனம் இயக்குகிறது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் 40%, வீடியோகான் பெட்ரோலியம் 25% மற்றும் சிங்கப்பூர் ராவ்வா எண்ணெய் 12.5% பங்குகளுடன் கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துடன் பங்குதாரர்களாக உள்ளன.

வளர்ச்சியும் உற்பத்தியும்

தொகு

கெய்ர்ன் இந்தியா நிறுவனத்துடன் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம், வீடியோகான் மற்றும் சிங்கப்பூர் ராவ்வா எண்ணெய் நிறுவனம் ஆகியவை இணைந்து 25 ஆண்டு கால உற்பத்தி பகிர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இயங்கி வந்தன. இந்த ஒப்பந்தம் 2019 ஆம் ஆண்டு காலாவதியானது. எண்ணெய் வயலில் எட்டு ஆளில்லா கடல் தளங்களும் கடலடி குழாய்களும் இயக்கப்படுகின்றன.

ராவ்வா வயலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் நான்கு குழாய்கள் வழியாக ராவ்வா கடற்கரை முனையத்திற்கு மாற்றப்படுகிறது. சுரசானியானம் கிராமத்தில் 225 ஏக்கர் பரப்பளவில் எண்ணெய் செயலாக்கம் நடைபெறுகிறது. எண்ணெயின் கடலோர சேமிப்பு திறன் ஒரு மில்லியன் பீப்பாய்களாகும்.[1][2]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "The average gross production from the Ravva field is 25,986 BOEPD (FY2015)". Cairn India. Archived from the original on 2016-04-22. பார்க்கப்பட்ட நாள் 2016-01-01.
  2. "Ravva Oil and Gas Field, India". Offshore Technology. பார்க்கப்பட்ட நாள் 2016-01-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராவ்வா_எண்ணெய்_வயல்&oldid=3569680" இலிருந்து மீள்விக்கப்பட்டது