ராஷ்மி ஆனந்த்

ராஷ்மி ஆனந்த் (Rashmi Anand) ஓர் இந்திய சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர் ஆவார். இவர் குடும்ப வன்முறைகள் பற்றி எழுதியதன் மூலம் பரவலாக அறியப்படுகிறார். இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக உயரிய விருதான நரி புரஸ்கார் விருதினை குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றார்.

ராஷ்மி ஆனந்த்
தொழில்எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளார்
தேசியம்இந்தியா
வகைஉரைநடை, பாடல்
கருப்பொருள்குடும்ப வன்முறை

வாழ்க்கை தொகு

ஆனந்த் கொல்கத்தாவில் வளர்ந்தார். இவரது பணி காரணமாக இவர் டெல்லி சென்றார். அங்கு பரவலாக அறியப்படும் வழக்குரைஞர் ஒருவரைத் திருமணம் செய்தார்.

இவர் தனது கணவரால் பத்து ஆண்டுகளாக உடல் ரீதியான வன்முறைக்கு ஆளானார். இந்தத் தம்பதியினருக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இதன் காரணமாக இவர் தனது குழந்தைகளுடன் கணவரை விட்டுப் பிரிந்து சென்றார். கணவரின் அச்சுறுத்தல் காரணமாக அவர்மீது வழக்குத் தொடுக்கவில்லை என்றும் பல சிக்கல்களுக்குப் பிறகு தனது குழந்தைகளை தன்னுடன் அழைத்து வந்ததாகவும் தனது முதல் நூலில் குறிப்பிட்டுள்ளார்.[1]

2010 டெல்லி போலீஸ் காலண்டர் என்பது இவரது முதல் நூலினை அடிப்படையாகக் கொண்டது. [2]

வீட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுகு சட்ட ரீதியாகவும் உள ரீதியாக்வும் உதவிகளை வழங்குவதற்காக "உமன் ஆஃப் தி எலெமண்ட்ஸ் டிரஸ்ட்" என்பதனை நிறுவினார்.[3]

விருதுகள் தொகு

  • நரிசக்தி புரஸ்கார்- குடியரசுத் தலைவரிடம் இருந்து-2015
  • நீர்ஜா பனோத் விருது
  • தெ கர்மவீரர் ஜோதி
  • தூர்தர்ஷனின் பெண் சாதனையாளர் விருது.
  • எழுச்சி நாயகர் விருது-வீ ஆர் தெ சிட்டி

சான்றுகள் தொகு

  1. Malini, Hema; Various; ltd, Pioneer Book Company Pvt (in en). New Woman: Aug_2016. Pioneer Book Co. Pvt. Ltd.. https://books.google.com/books?id=M7LNDAAAQBAJ&pg=PA90&dq=rashmi+anand#q=rashmi%20anand. 
  2. "karmaveerawards". www.karmaveerawards.com. Archived from the original on 2020-02-21. பார்க்கப்பட்ட நாள் 2020-05-17. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. Thacker, Hency (2019-11-28). "Orange The World: Fighting Domestic Violence". The CSR Journal (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஷ்மி_ஆனந்த்&oldid=3669965" இலிருந்து மீள்விக்கப்பட்டது