ராஸ்பெரி

உண்ணத்தகுந்த பழம்

ராசுபெரி (Raspberry) ரூபசு பேரினம், ரோசா குடும்பத்தை சேர்ந்த ஒரு உண்ணத்தகுந்த பழமாகும். இவற்றில் பெரும்பாலானவை துணைப்பேரினம் இதியோபதுசில் உள்ளடங்கியவையாகும். ராசுபெரி ஒரு முக்கியமாகப் பயிர் செய்யப்படும் வணிக பழவகையாகும், இவை பரவலாக உலகின் அனைத்து மிதவெப்ப பகுதிகளிலும் வளர்க்கப்படுகின்றன. பெரும்பாலான நவீன சிவப்பு ராசுபெரிகள் ர.இதியஸ் மற்றும் ர.இசுதிரிகோசுசில் இருந்து கலப்பினம் செய்யப்பட்டவையாகும்.[1] இவை விரைவான உறைந்த பழம், கூழ், சாறு, அல்லது உலர்ந்த பழங்கள் போன்றவையாக உபயோகப்படுத்தபடுகின்றன.

நான்கு வகை ராசுபெரிகள். கடிகார சுற்றில் மேல் இடது பக்கத்தில் இருந்து பாறை ராசுபெரி, கொரிய ராசுபெரி,ஆத்திரேலிய ராசுபெரி,மொரீசியசு ராசுபெரி

வணிக ரீதியான உற்பத்தி தொகு

ராசுபெரி தயாரிப்பாளர்கள் ஆயிரம் கிலோக்களில்
நாடு 2010 2011
  உருசியா 125,000 27% 140,000 26%
  போலந்து 92,864 20% 117,995 22%
  செர்பியா 83,870 18% 89,602 16%
  ஐக்கிய அமெரிக்கா 36,741 8% 48,948 9%
  உக்ரைன் 25,700 5% 28,100 5%
  மெக்சிக்கோ 14,343 3% 21,468 4%
  ஐக்கிய இராச்சியம் 17,000 4% 16,761 3%
  கனடா 11,864 3% 12,285 2%
  அசர்பைஜான் 10,100 2% 11,000 2%
  எசுப்பானியா 9,226 2% 9,559 2%
 மொத்தம் 471,322 100% 543,421 100%
Source: UN FAOSTAT [2]
 
உலகளவில் ராசுபெரி விளைச்சல்

மேற்கோள்கள் தொகு

  1. Huxley, A., ed. (1992). New RHS Dictionary of Gardening. Macmillan ISBN 0-333-47494-5.
  2. "Statistics from: Food And Agricultural Organization of United Nations: Economic And Social Department: The Statistical Division". UN Food and Agriculture Organization Corporate Statistical Database.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஸ்பெரி&oldid=2698418" இலிருந்து மீள்விக்கப்பட்டது