ரா. அனந்தகுமார்
மரு.ரா.அனந்தகுமார் (பிறப்பு 06 ஆகத்து 1975) இந்திய ஆட்சிப் பணியாளரும் மற்றும் விலங்கு மருத்துவரும் ஆவார்.
மரு.ரா.அனந்தகுமார். இ.ஆ.ப. | |
---|---|
சிறப்பு செயலாளர் [1] | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 01.01.2019 | |
26வது ஈரோடு மாவட்ட ஆட்சியர்[2] | |
பதவியில் 03.06.2011–15.07.2011 | |
8வது தர்மபுரி மாவட்ட ஆட்சியர்[3] | |
பதவியில் 01.10.2010–03.06.2011 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அனந்தகுமார் 6 ஆகத்து 1975 வதம்பச்சேரி,கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
ஆரம்ப காலம்
தொகுகோயம்புத்தூர் மாவட்டத்தில் வதம்பச்சேரி என்ற ஊரில் 1975 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 6 ஆம் நாள் இராமசாமி மற்றும் ஜெயலட்சுமி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது மனைவி ஸ்ரீவித்யா ஒரு அரசு உதவி மருத்துவர் ஆவார். இவர்களுக்கு கோபிகா மற்றும் தீபிகா என இரு மகள்கள் உள்ளனர்.
கல்வி
தொகுதனது ஆரம்ப பள்ளி மற்றும் மேல்நிலை கல்வியை தமிழ் வழியில் வதம்பச்சேரியில் பயின்றவர். இவர் நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரியில்கல்லூரியில் கால்நடை மருத்துவ பட்டப்படிப்பை பயின்றார். விளையாட்டுகளில் ஆர்வம் கொண்ட இவர் அப்போது கல்லூரி கால்பந்து அணிக்கு தலைமையேற்று பல வெற்றிகளை பெற்று தந்தவர். அதிக மதிப்பெண்களை பெற்றமைக்காக கல்லூரி இறுதி ஆண்டில் 5 தங்கப்பதகங்களையும் வென்று சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். கால்நடை மருத்துவத்திலும் முதுநிலை பட்டம் பெற்றுள்ளார்.[4]
பணி
தொகு2003 ஆம் ஆண்டில் இந்திய ஆட்சிப் பணியாளர் தேர்வில் தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக எடுத்து தமிழக மாணவர்களிலே முதலிடத்தில் வெற்றி பெற்ற பெருமைக்குரியவர்.[5] இவர் தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக இருந்தவர். ஈரோடு மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த போது இவர் ஆற்றிய பணிகளை பாராட்டி நற்பணி விருதினை சமிபத்தில் செஞ்சிலுவை சங்கம் வழங்கியுள்ளது. இவர் தமிழ் வழியில் படித்து அறிவியலின் உண்மை சுவையை தாய் மொழியில் உணர வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர். எனவே தனது மகளை ஈரோடு நகரின் குமனன் குட்டை என்ற இடத்தில் உள்ள அரசுப் பள்ளியில் சேர்ந்தார். [6]
பொழுதுபோக்கு
தொகுபடிப்பது மற்றும் எழுதுவது இவரது பொழுதுபோக்கு ஆகும். இவர் தமிழ் கல்வியியல் சார்ந்த 8 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். இவர் சென்னை கால்பந்து பந்து சங்கம் நடத்தும் போட்டிகளில் விளையாடுகிறார் மற்றும் தமிழ்நாடு துடுப்பாட்ட சங்கம் லீக் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர் ஒரு குதிரையேற்ற வீரமும் ஆவார்.
விருதுகள்
தொகு- ஐந்து தங்கப்பதக்கம்
- ஒரு வெள்ளிப்பதக்கம்
- நற்பணி விருது
- சிறந்த தடகள வீரர்
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.tn.gov.in/detail_contact/9/3
- ↑ https://erode.nic.in/about-district/district_collectors/
- ↑ https://dharmapuri.nic.in/roll-of-honour/
- ↑ http://anandakumarias.com/#
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-02-23. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
- ↑ https://www.thehindu.com/news/cities/Coimbatore/no-plush-school-for-this-collectors-daughter/article2109347.ece/amp/