ரிக்வேதகால ஆரியர்கள் (நூல்)


இந்தியாவின் கி.மு. காலத்திய சமூக பதிவுகளை வேதங்கள், அகழ்வாராய்ச்சி, கல்வெட்டுகள், ஆகியவற்றின் துணைகொண்டு அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அந்த வரிசையில் ரிக்வேத காலத்தில் இருந்த நிலவியல், சமூகபொருளாதாரம், அரசியல், போன்றவற்றினைத் தெரிந்துகொள்ள மிகவும் பழமையான ரிக் வேதமே முதன்மைவகிக்கிறது. கி.மு காலத்திய சமூக அமைப்பு முறைகளை ரிக் வேதங்களில் இருந்து தெரிந்து கொள்ளும் விதமாய் ரிக்வேத காலத்திய முனிவர்களின் ஸ்லோகங்களை தேவையான இடங்களில் தந்து இந்த ஆராய்ச்சியை செய்துள்ளார் ராகுல்ஜீ. இந்த நூலில் 4 பாகமாக பிரித்தும், ஒவ்வொரு பாகத்திலும் உப தலைப்புக்களில் விரிவான தகவல்களை தந்துள்ளார்.

ரிக்வேதகால ஆரியர்கள்
நூல் பெயர்:ரிக்வேதகால ஆரியர்கள்
ஆசிரியர்(கள்): ராகுல்ஜீ
வகை:ஆய்வு நூல்
துறை:சமூக வரலாறு
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:219
பதிப்பு:1991

முதல்பாகம் - நிலவியல்

தொகு

1. சப்த சிந்து, 2 ஆரிய இனக் குழுக்கள், என இரண்டு முதன்மைத் தலைப்புக்களிலும், சப்த சிந்து [1] தலைப்பில் 1. ஆரியர்களின் வருகை, 2. அதன் பின்னரே ரிக்வேதம், 3. ரிக்வேதம் தலைசிறந்த சான்று, 4. சப்த சிந்து பூமி என்றும், ஆரிய இனக்குழுக்கள் [2] என்றதலைப்பில் 1. சிந்து நாகரீகம்,[1] 2. ஆரிய இனக்குழுக்கள்[2]என்றும் பிரித்து எளிமையாக அறியும் வண்ணம் எழுதப்பட்டுள்ளது.

இரண்டாம் பாகம் - சமூக, பொருளாதாரங்கள்

தொகு

3.வர்ணமும், வர்க்கமும், 4. உணவும், பானமும் என முதன்மைத்தலைப்புக்களிலும், வர்ணமும், வர்க்கமும் தலைப்பில் 1. வர்ணம் (நிறம்), 2. வர்க்கம் என்றும், உணவும், பானமும் தலைப்பில் 1. உணவு 2. பானம் என முக்கிய உணவு, உணவு உற்பத்தி, பானம் உணவுக்கு இணையாக தயாரிக்கப்பட்ட பானவகைகள் பற்றி முனிவர்கள் கூறிய ஸ்லோகங்களை தக்க ஆதாரங்களுடன் தரப்பட்டுற்றது.

இதையும் பார்க்கவும்

தொகு

இருக்கு வேதம்

சான்றாவணம்

தொகு
  1. 1.0 1.1 வேதகால ஆரியர்கள்.-ராகுல்ஜீ- NCBH வெளியீடு- தமிழாக்கம்- ஏ.ஜி.எத்திராஜுலு.பி.ஏ.,
  2. 2.0 2.1 "Indus Civilization"- M.Wheelir, " Cambridge history of India "-appendix