ரிங்கி கன்னா

இந்திய நடிகை

ரிங்கிள் கன்னா (Rinke Khanna) (பிறப்பு ரிங்கிள் சதின் கன்னா ; 27 சூலை 1977) ஓர் இந்திய நடிகை ஆவார். [1] [2] இவர் நடிகை டிம்பிள் கபாடியா மற்றும் நடிகர் ராசேசு கன்னாவின் இளைய மகள் ஆவார். இவருக்கு ட்விங்கிள் கன்னா என்ற சகோதரி உள்ளார். இவர் பியார் மே கபி கபி (1999) திரைப்படத்தில் அறிமுகமானார். இவர் தனது இயற்பெயரான ரிங்கிள் என்ற பெயரை ரிங்கி என்று மாற்றினார். முசே குச் கெக்னா கை என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்தார். [3]

ரிங்கி கன்னா
Rinke Khanna
2015 இல் கன்னா
பிறப்புரிங்கிள் சத்தின் கன்னா
27 சூலை 1977 (1977-07-27) (அகவை 47)
மும்பை, மகாராஷ்டிரா, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1999–2004
வாழ்க்கைத்
துணை
சமீர் சரண் (தி. 2003)
பிள்ளைகள்2
உறவினர்கள்ட்விங்கிள் கன்னா (சகோதரி)

ஆரம்பகால வாழ்க்கை

தொகு

கன்னா 27 சூலை 1977 [4]இல் மும்பையில் பிறந்தார். தந்தை ராசேசு கன்னா மற்றும் தாயார் டிம்பிள் கபாடியா ஆகியோருக்கு பிறந்தார். இவர்கள் இருவரும் திரையுலகைச் சார்ந்தவர்கள். இவர் பெற்றோரின் இளைய மகள் ஆவார். இவரது மூத்த சகோதரி ட்விங்கிள் கன்னாவும் ஓர் நடிகை ஆவார்.[5] இவர் 8 பிப்ரவரி 2003 இல் சமீர் சரணை மணந்தார் மற்றும் லண்டனில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.[6]

திரைப்படங்கள்

தொகு
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்புகள்
1999 பியார் மேய்ன் கபி கபி குசி சீ சினி விருது சிறந்த அறிமுக நடிகைக்கான, சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது
2000 ஜிஷ் தேஷ் மேய்ன் கங்கா ரஹ்தா தினா
2001 முஜே குச் கெஹனா ஹை பிரியா சலுஜா
மஜ்னு கினா தமிழ்
2002 யே ஹை ஜாவ்லா ரிங்கி மிட்டல்
மேங்கோ சூப்ல் கிரண்
2003 பிரான் ஜயே பர் ஷான் ந ஜயே சுமன்
ஜங்கார் பீட்ஸ் நிக்கி
2004 சமேளி நேகா

மேற்கோள்கள்

தொகு
  1. "Meet Rinke Khanna's Daughter Naomika (All Smiles With Nani Dimple Kapadia)". NDTV.com. NDTV. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
  2. "Twinkle Khanna and Dimple Kapadia spotted outside a salon but who is this cutie with them? Bollywood News". timesnownews.com. Times Now. Archived from the original on 25 March 2019. பார்க்கப்பட்ட நாள் 17 March 2019.
  3. Khanna, Rinke. Interview with Lata Khubchandani. The Rediff Interview: Rinke Khanna. 4 October 2000.
  4. "Twinkle Khanna pens goofy birthday wish for sister Rinke Khanna: 'May you never have to deal with fools, except me'". 27 July 2023.
  5. "Rediff On The Net, Movies: Fresh 'n' friendly". Rediff.com. 10 July 1999. Archived from the original on 4 October 1999.
  6. "Family ties above family business". The Telegraph (India). பார்க்கப்பட்ட நாள் 12 November 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிங்கி_கன்னா&oldid=4123343" இலிருந்து மீள்விக்கப்பட்டது