ரிங்வூடைட்டு

ரிங்வூடைட்டு (Ringwoodite) என்பது நீர் வளம் கொண்ட கனிமப்பொருள் ஆகும். வேறு ஒரு கனிமப் பொருள் பற்றி ஆய்வில் ஈடுபடும்போதே இது எதிர்பாராத விதமாக கண்டு பிடிக்கப்பட்டது. இது மூடகத்தின் இடையில், அதாவது 525 தொடக்கம் 660 கிலோமீற்றருக்கு இடையில் உள்ள ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பூமியின் மேற்பரப்பிலிருந்து 660 கிமீ ஆழத்தில் உருவான வைரத்தை நுட்பங்களைப் பயன்படுத்தி பகுப்பாய்வு செய்த போது அதில் இருந்த வேதியியல் பொருட்களில் அதிக அளவில் ரிங்வூடைட்டு இருப்பது கண்டறியப்பட்டது. [1]இதன் மொத்த நிறையில் 1.5 சதவீதம் நீர் உள்ளது. இந்நீர் திரவமாக அன்றி ஹைரொக்சைட்டு அயனாகவே காணப்படுகின்றது.[2] இக்கனிமப்பொருள் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டது.

ரிங்வூடைட்டு

பன்னாட்டு கனிமவியல் சங்கம் ரிங்வூடைட்டு Rgd[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிங்வூடைட்டு&oldid=4095046" இலிருந்து மீள்விக்கப்பட்டது