ரிச்சர்ட் ஆட்டன்பரோ

(ரிச்சர்ட் அடென்போரோ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரிச்சர்ட் ஆட்டன்பரோ (Richard Attenborogh 29 ஆகத்து 1923[2] - 24 ஆகத்து 2014) ஆங்கிலேய நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், மற்றும் தொழிலதிபர் ஆவார். இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக 1983 ல் காந்தி திரைப்படத்திற்காக இரண்டு அகாதமி விருதுகளை பெற்றார். அத்துடன் நான்கு பாஃப்ட்டா விருதுகளையும், நான்கு கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்றார். இவர் நடித்த கிரேட் எஸ்கேப், ஜுராசிக் பார்க் போன்ற திரைப்படங்கள் இவருக்குப் புகழ் பெற்றுத் தந்தன.[3]

ஆட்டன்பரோ பிரபு
2007 டொரன்டோ பன்னாட்டு திரைப்பட விழாவில் ஆட்டன்பரோ
பிறப்புரிச்சர்ட் சாமுவேல் ஆட்டன்பரோ
(1923-08-29)29 ஆகத்து 1923
கேம்பிரிட்ச், ஐக்கிய இராச்சியம்
இறப்பு24 ஆகத்து 2014(2014-08-24) (அகவை 90)[1]
லண்டன், ஐக்கிய இராச்சியம்
படித்த கல்வி நிறுவனங்கள்நாடகவியல் கலைக்கான ரோயல் அகாதமி
பணிநடிகர், இயக்குனர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1942–2007
பட்டம்பிரித்தானிய திரைப்பட, தொலைக்காட்சி அகாதமி தலைவர்
பதவிக்காலம்2001–2010
வாழ்க்கைத்
துணை
சீலா சிம்
(1945 முதல்)
பிள்ளைகள்மைக்கேல் ஆட்டன்பரோ, ஜேன், சார்லட்
உறவினர்கள்டேவிட் ஆட்டன்பரோ, ஜோன் ஆட்டன்பரோ (சகோதரர்கள்)

இவரது சகோதரர் சர் டேவிட் ஆட்டன்பரோ, இயற்கை வரலாற்றாளரும், ஒலிபரப்பாளரும் ஆவார்.

இளமைக்காலம் தொகு

அட்டன்பரோ இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஜில் 29 ஆகஸ்ட் 1923 அன்று பிறந்தார். லீசெஸ்டரில் உள்ள வைக்ஸ்டன் ஆண்கள் இலக்கணப் பள்ளியில் படித்தார். இரண்டாம் உலகப் போரின் போது, ராயல் விமானப்படையில் பணியாற்றினார். 1960 களின் தொடக்கம் வரை, அட்டன்பரோ பிரிட்டனில் ஒரு நல்ல நடிகராக அறியப்பட்டார்.

நடிப்புத் தொழில் தொகு

முதன்முறையாக இன் விச் வீ செர்வ் என்ற திரைப்படத்தில் (1942)நடித்தார். அதில் அவர் ஒரு வெறிச்சோடிய கப்பலோட்டி போல் நடித்திருக்கிறார். பின்பு 1947 இல் பிரைட்டன் ராக் என்ற படத்தில் பின்கி என்ற கதாபாத்திரமாக நடித்தார். 1949 ஆம் ஆண்டில், பாக்ஸ் ஆபிஸில் அவரை ஆறாவது மிக பிரபலமான பிரித்தானிய நடிகர் என்று பொதுமக்கள் வாக்களித்தனர்.[4]

நியூ அட்வென்ச்சர்ஸ் (1943) திரைப்படத்தில் ரயில்வேத்துறைப் பணியாளராகவும், எ மேட்டர் ஆப் லைப் அண்ட் டெத் (1946) திரைப்படத்தில் ஆங்கில பைலட்டாகவும் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் ஜுராசிக் பார்க் (1993) திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து மிராக்கில் ஆன் தர்ட்டிபோர்த் ஸ்டீட் (1994), ஹாம்லட் (1996), எலிஸபெத் (1998) ஆகிய படங்களில் நடித்த இவர், சாப்லின் (1992) திரைப்படத்தை இயக்கினார். 2007 வரை பல படங்களை இயக்கியுள்ளார்.[5]

இழப்பு தொகு

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 இல்அ ட்டன்பரோ தாய்லாந்தில் ஏற்பட்ட சுனாமியில் தன் மகள் ஜேன் , மாமியார் ஆட்ரி மற்றும் பேத்தி லூசியையும் இழந்தார்

இறப்பு தொகு

அட்டன்பரோ சிறிது காலம் உடல் நலம் குன்றி இருந்தார் .2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 இல் மரணம் அடைந்தார் . அவருக்கு இறக்கும் போது மனைவி ,இரு குழந்தைகள் ,ஆறு பேரக்குழந்தைகள் மற்றும் இரு கொள்ளு பேரர்கள் இருந்தனர் .அவர் மனைவி 2016 ஜனவரி 19 இல் மரணம் அடைந்தார்

மேற்கோள்கள் தொகு

  1. "காந்தி பட இயக்குநரும், நடிகருமான ரிச்சர்ட் அட்டென்பரோ காலமானார்". தினத்தந்தி. ஆகஸ்ட் 25,2014. http://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2014/08/25102004/Actor-Director-Richard-Attenborough-Has-Died.vpf. பார்த்த நாள்: 25 ஆகத்து 2014. 
  2. "Encyclopaedia Britannica". Britannica.com. 9 November 2013. பார்க்கப்பட்ட நாள் 24 ஆகத்து 2014.
  3. "Filmography by votes for Richard Attenborough", IMDb. Retrieved 27 March 2011.
  4. "Bob Hope Takes Lead from Bing In Popularity.". The Canberra Times (ACT: 1926 – 1954) (ACT: National Library of Australia): p. 2. 31 December 1949. http://nla.gov.au/nla.news-article2759831. பார்த்த நாள்: 27 April 2012. 
  5. "The Man behind the Mahatma: Richard Attenborough (1923-2014)". The Hindu. August 26,2014. http://www.thehindu.com/features/cinema/richard-attenborough-the-man-behind-the-mahatma/article6350945.ece. பார்த்த நாள்: 26 August 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிச்சர்ட்_ஆட்டன்பரோ&oldid=3925634" இலிருந்து மீள்விக்கப்பட்டது